அன்பே... உன்னை சந்தித்து பல மாதங்கள் ஆகிறது..., காதலின்...
அன்பே...
உன்னை சந்தித்து
பல மாதங்கள் ஆகிறது...,
காதலின் வலியை,
சற்று அதிகமாகவே
கற்று கொடுத்துவிட்டாய்...,
உன்னை
சந்திக்க முடியாமல்,
முழுவதும் தோற்றுவிட்டேன்...,
உனைக்கானும்
நிமிடத்தின் முன்...
உன் சுவாச காற்றை தேடி,
திசை தொலைந்த பறவையானேன்...,
எங்கேயடி நீ....
முப்பொழுதும்..
எப்பொழுதும்..
என்னோடு என்றாயே...!
இப்பொழுது நீ எங்கே....?
காணும் இடமெங்கும்
கானல் நீர் பரப்பிவிட்டாய்...,
உனைக்கான ஓடி வந்து
ஏமாந்து போகிறேன்...,
இப்பொழுதெல்லாம்..
கனவில் மட்டுமே
உன் அதிகபட்ச வருகை...
குறைந்த பட்சமாவது
எதிரில் வந்துவிட்டு போ...,
காதல் கடிவாளம் போட்டுவிட்டாய்,
என் கடிகார முட்களுக்கு...
நீயில்லாமல் நகர மறுக்கிறது...,
ஆயிரம் பேர்
அருகில் இருந்தும்..
தனிமையை உணர்கிறேன்
நீயில்லாமல்...,
இனியும் வேண்டாம்
காதலின் தனிமை...
எனக்கு முட்களில் படுத்து
உறங்க தெரியவில்லை...,