எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இதை அறிவுரையா நெனைக்கிறவங்க படிக்க வேண்டாம். இங்கு எழுத...

இதை அறிவுரையா நெனைக்கிறவங்க படிக்க வேண்டாம்.

இங்கு எழுத வரவங்க எல்லாத்துக்குமே ஒரு தனித்துவம் இருக்கும்.. அத ஆர்வம்... வடிகால்... விருப்பம்.... பொழுதுபோக்கு... சுயபெருமை... தம்பட்டம் இப்படி என்ன வேணா அவங்கவங்க விருப்பத்துக்கு வச்சிக்கலாம்... ஆனா இந்த சதைக் கொழுப்பெடுத்துப் போய் வரவங்களை எந்த வரிசைல வைக்கிறதுன்னு தெரியலை.. உங்க கொழுப்புக்கு எல்லாம் தனியா நெறைய தளங்கள் இருக்குடா... அங்க போய் தோண்டலாம்ல.... அதுக்கு தமிழ்தான் பயன்படுத்தனுமா..? அசிங்கமா இருக்குடா.... தெறமைய ஏண்டா வேட்டைக்கி பயன்படுத்துறீங்க...? ஒரு பொண்ணு தோழான்னு கூப்பிட்டா அது எல்லாத்துக்கும் மேலடா... அது உங்களை.. இழுக்க கூப்பிடறதுல்ல....

இங்க எழுத வர பொண்ணுங்களுக்கு.....!! நீங்க கத்துக்க வருவீங்களோ... கத்துக்குடுக்க வருவீங்களோ... தெரியாது.... ஒருத்தவங்க எழுதுற எழுத்துமாதிரியே அவங்களும் இருக்கமாட்டாங்க... நான் உள்பட...!! இங்க எல்லாருமே முகமூடிதான். தோழாங்கற அளவிலேயே இருந்துக்கங்க.. அதையும் தாண்டி சில உறவுகளுக்குள்ள நீங்க போகும்போது அதை அடுத்த நிலைக்கான நுழைவு அட்டையா எடுத்துக்குறாங்க இங்க உள்ள பலபேரு. அது எப்படி ஒரு எழுத்துங்குற ஒரு விஷயத்த மட்டும் வச்சி ஒருத்தவன்களோட குணத்தை முடிவு பண்றீங்க? கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டீங்களா..? ஏன் மாமன் மச்சான் ன்னு கூப்பிட்டு பாருங்களேன் அது என்ன கெட்ட வார்த்தையா..? அப்ப தெரியும்..!! நீங்க அழைக்கும் உங்க உன்னத உறவோட கெக்கே பிக்கே... தயவு செய்து.....உங்களுக்கு பிடிச்சிருந்தா வெளிலையே வச்சி ஆத்திக்கங்க// உங்க உறவின் பெருமைகளை..... இங்க வந்து பெருமை பாட வேண்டாம்....!!

தள நிர்வாகத்திற்கு.. .... சார்.. எங்க எழுத வரவங்க எல்லாம் பொதுவாதானே படைப்புகள் போடறாங்க..? அப்பறம் ஏன் சார் இந்த தனிவிடுகை..? அரட்டை எல்லாம்..? இங்க நெறைய பேருக்கு வாழ்க்கை லேசாகுது... நல்ல அறிவு கெடைக்கிது.. இதெல்லாம் நல்ல விஷயங்கள்... அதே சமயம் நெறைய தப்பும் நடக்குது சார்.. பொதுவா படைப்பு போடும்போது தனியா பேசணும்னு அவசியமே இல்லை சார்.. அவங்க பேசிக்கனும்னா வெளில போய் பேசிக்கட்டும்... கருத்துலையே அவர்கள் தொடர்பு எண்கள் பரிமாறி கொள்ளட்டும்.. ... நல்ல விஷயம் போய்க்கிட்டு இருக்கும்போது இந்தமாதிரி விஷயங்கள் எங்க தளத்துக்கு முட்டுக்கட்டையா இருக்குமோன்னு நெருடுதுங்க.... நான்லாம் இப்ப சில சமூக வலைதளங்களுக்கு போறதே இல்லை. எனக்கு தேவையான விஷயங்கள்... என்னோட தேடலுக்கு சில தீர்வுகள் இங்க கெடைக்கிது... சந்தோஷமா இருக்கேன்.. அதுல நெறைய விஷம் கலக்குறப்போ கஷ்டமா இருக்கு....

நல்ல பகிர்தலுக்கும் புரிதலுக்கும் தயாரா இருக்க தோழர்கள் தோழமைகள் மட்டும் இதை பகிருங்க... பின்னூட்டம் போடுங்க... நன்றி...!!

பதிவு : கட்டாரி
நாள் : 3-Oct-14, 7:06 am

மேலே