என்ன செய்தாலும் குறை சொல்லும் உலகத்திலே ... *********************************************************************************...
என்ன செய்தாலும் குறை சொல்லும் உலகத்திலே ...
*********************************************************************************
கணவன் மனைவி இருவரும் கழுதையில் பயணித்தனர் (அப்போது வாகன வசதி இல்லை )
தொலைதூரம் போகவேண்டி இருந்தது .சிறிது தூரம் சென்றதும் கழுதை சோர்வடைவதை கண்ட கணவர் தன் மனைவியை அமர செய்து தான் மட்டும் இறங்கி கழுதையுடன் நடக்க செய்தார் ...சிறிது தூரத்தில் அவர்களை சில மக்கள் கண்டனர் .அப்போது மக்கள் பேசிக்கொண்டனர் அடக்கொடுமையே !புருசன நடக்க வச்சு எவ்வளவு ஒய்யாரமா கழுதையில் உட்கார்த்திருக்கா பார் சரியான திமீர் பிடித்தவள் என்றனர் .அதை கேட்ட மனைவி உடனே இறங்கிகொண்டு கணவனை அமர செய்து நடக்கலானார் சிறிது தூரம் சென்றதும் சிலர் அடப்பாவமே !இந்த அநியாயத்த பார்தீங்களா பாவம் பொண்டாட்டிய நடக்க விட்டு அவன் கழுதையில உங்கார்ந்து ஆம்பளை திமீர் காட்டுரதனு பேசினார்கள் .அதை கேட்டதும் கணவனும் இறங்கி கொள்ள இருவரும் கழுதையை கூட்டிக்கொண்டு நடக்கலாயினர் அதை பார்த்த மற்றொர்கூட்டம் என்ன கொடுமைடா இது ,அறிவில்லாதவனா இருப்பா போல கழுதையை வச்சுக்கிட்டு நடந்து போறானுங்கனு பேசினார்களாம் வேறு வழியில்லாது இருவரும் கழுதை மீது ஏறி மறுபடி பயணத்தை தொடங்க சிறிது தூரம் சென்றதும் மற்றோர் கூட்டம் அதை பார்த்து கொஞ்சம் கூட மனிதாபமானமே இல்லாதவனா இருக்கானே பாவம் கழுதை சுமக்க முடியாம தவிக்குது வாயில்லா ஜீவன இப்படி வதைக்கிரவண என்ன செய்யணு பேசினாங்களாம். அடக்கடவுளே இப்ப நாங்க என்ன செய்யட்டும்னு கணவனும் மனைவியும் அழுதன்கலாம் .