எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புரட்சியாளன் தோழர் “சே” நினைவு தினம்! தோழர் “சே”...

புரட்சியாளன் தோழர் “சே” நினைவு தினம்!

தோழர் “சே” யும் தோழர் தமிழரசனும் அடக்கு முறை அரசுகளால் கொல்லப்பட்டார்கள்.

ஆனால் புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள்.

வரலாறு அடக்குமுறை அரசுகளின் கனவுகளை உடைத்தெறியும்.

“சே” புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டார் என்பதை
அவரில் இருந்து முளைத்த பல்லாயிரம் போராளிகள் நிரூபிக்கின்றனர்.

“சே” பிரதமர் பதவிக்காக முஸ்லிம்களை கொன்றவர் அல்ல
அவர் கிடைத்த அமைச்சுப் பதவியை மக்களுக்காக துறந்தவர்.

“சே” மக்கள் பணத்தை கொள்ளையடித்து சிறை சென்றவர் அல்ல
அவர் மக்களுக்காக போராடி உயிர் துறந்தவர்.

“சே” ஆயுதம் ஏந்திப் போராடியதை போற்றும் சிலர்
தமது பாதையோ “தேர்தல் பாதை” என்கின்றனர்.

“சே” யை போராளி என்று வரவேற்ற இந்திய அரசு
தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்று அடித்து கொன்றது.

“சே” யில் இருந்து பல்லாயிரம் போராளிகள் முளைத்தனர்.
அதுபோல் தமிழரசனில் இருந்தும் போராளிகள் முளைப்பர்.
இதை இந்திய அரசுக்கு வரலாறு நிரூபிக்கும்.

நாள் : 10-Oct-14, 11:25 pm

மேலே