எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

~~~~~~~~~~மகாகவிக்கு என் வாழ்த்துமடல்~~~~~~~~~~ புது கவிதை நான் எழுத...

~~~~~~~~~~மகாகவிக்கு என் வாழ்த்துமடல்~~~~~~~~~~
புது கவிதை நான் எழுத விதை இட்டவனே
விடுதலை வேட்கைக்கு வித்திட்டவனே
தமிழனாய் பிறந்ததனால் உன்னை
புகழ்ந்து எழுத கிடைத்தது நான் பெற்ற பேறு...
இதை தவிர வேறு காரணம் இருக்குமோ
தமிழறிந்த நல்லுலகமே நீ கூறு ...

நீ சுப்பிரமணிய அய்யர் தான்
இருந்தாலும்
பெரியார் மனதில் என்றும் நீ HIGHER தான்
சாதி பார்த்திடா பெரியார்கள் மனதில் என்றும் நீ HIGHER தான்....

ஏதும் அறியா குருவிக்கு நீ காட்டிய கரிசனம்
அதனால் தான் என்னவோ
பராசக்தி எங்கும் நகராமல் போட்டுவிட்டாள்
உன் நாவில் தமிழ் அரியாசனம்
என்றும் அதுவே தமிழின் சரியாசனம் .....

அன்று உன் இறுதி ஊர்வலத்தில்
ஆயிரம் பேர் கூட இல்லை
இன்று வலம் வரும் உன் கவிதேரை
வடம் பிடித்து இழுகாதவன் எவனும் இல்லை...

உன் கவி கன்னியால் மட்டும் அல்ல
மடி கணினியாலும் பேசபடுகிறது
நாளை வரும் மனித கணினியாலும் பேசப்படும்
நீ தமிழின் பிள்ளை
உனக்கு ஈடாகுமோ
ஒன்றும் அறியாதவனின்
இந்த சின்னசிரிய பா மாலை.....
வாழ்க மகாகவி புகழ்~~~~~

பதிவு : அருண்ராஜ்
நாள் : 11-Dec-14, 6:16 pm

மேலே