டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் ரஜினி-அஜித்-விஜய்யை முந்திய ஏ.ஆர்.ரகுமான்...
டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் ரஜினி-அஜித்-விஜய்யை முந்திய ஏ.ஆர்.ரகுமான்
சர்வதேச ஆங்கில நாளிதழான ஃபோர்ப்ஸ் ஆண்டு தோறும் இந்தியாவில் டாப் 100 பிரபலங்களை பட்டியலிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் இந்தியாவின் 2014 டாப் 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், முதலிடத்தை இந்தி நடிகர் சல்மான்கான் பெற்றுள்ளார். தொடர்ந்து அமிதாப்பச்சன், ஷாருக்கான், தோனி, அக்ஷய்குமார், விராட் கோலி, அமீர்கான், தீபிகா படுகோனே, ஹிருத்திக் ரோஷன், சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் முதல் பத்து இடங்களை பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் தென்னிந்தியாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 13-வது இடத்தையும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 39-வது இடத்தையும், நடிகர் விஜய் 41-வது இடத்தையும், ரஜினிகாந்த் 45-வது இடத்தையும், அஜித் குமார் 51-வது இடத்தையும், தனுஷ் 78-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தெலுங்கில், மகேஷ் பாபு 30-வது இடத்தையும், பவன் கல்யாண் 74-வது இடத்தையும், அல்லு அர்ஜூன் 80-வது இடத்தையும் பிடித்துள்ளனர். மலையாள, கன்னட நடிகர்களில் யாரும் இந்த 100 பிரபலங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.