சில நேரங்களில் கேள்விகள் எதுவும் மீதம் இருப்பதில்லை .....
சில நேரங்களில் கேள்விகள் எதுவும் மீதம் இருப்பதில்லை .. ஆனால் , பதில்கள் மட்டும் நிறைய இருப்பதுண்டு ..
ஒவ்வொரு பதிலுக்கும் பொருத்தமாக இருக்குமாறு , எதோ ஒரு கேள்வியை நானே பொருத்திக் கொள்வதுண்டு எப்போதும் ..
பதில்களுக்கு பொருத்திக் கொண்டது போக மீதமிருக்கும் கேள்விகளுக்கு மட்டும் , இதுவரையில் பதில்கள் கிடைத்ததே இல்லை..
சில கேள்விகளில் மனிதர்கள் உண்டு .. சில கேள்விகளில் சூழ்நிலைகள் உண்டு ..
இன்னும் சில கேள்விகளில் நான் மட்டுமே உண்டு..
நான் மட்டும் இருக்கும் கேள்விகளுக்கு எப்போதாவது விடைகள் கிடைக்கக் கூடுமென்று காத்திருக்கிறேன் ..
கேள்விகளின்றி பதில்கள் மீந்து போகும் எதோ ஒரு நாளில் , பதில் கிடைக்காமல் என்னிடம் இருக்கும் கேள்விகளுக்கு பொருத்தமான ஒரு பதிலை நானே பொருத்திக் கொள்வேன் ..
இன்னும் சில கேள்விகளுக்கு , எப்போதுமே எனக்கு பதில் தேவை இல்லை...
- கிருத்திகா தாஸ்...