இவனின் மூவிரலும் இணைந்து எழுதும்போது கம்பனும் வைரமுத்துவும் கைகுலுக்கிகொள்வார்களோ?...
இவனின் மூவிரலும்
இணைந்து எழுதும்போது
கம்பனும் வைரமுத்துவும்
கைகுலுக்கிகொள்வார்களோ?
காதல் கவிதையில்
கற்பனையின் உச்சம்.
அன்பின் பிரமிப்பு..!
சமூக கவிதைகளில்
அதிரடி அனல்வீச்சு
சாட்டையடி வீராப்பு..!
அப்பப்பா.... அம்ம்மா
வியக்கிறேன்.. இவன் எழுத்தில்
ரசனை வியர்வையில்
நனைந்தே மகிழ்கிறேன்.
ஏதோ ஒர் இளைஞன் தான்....
கவிப்பாடும் தோழன் தான்.
சராசரியானவன் தான்..
எனக்கும் தம்பி தான்..
” யாருக்கும் இல்லாத அக்கறை
உனக்கு ஏன் ? “
கேட்பவர்களின் மத்தியில்
” யாராலும் முடியாத ஒன்று
உன்னால் ஏன் முடியாது ? “
கேட்கிறான் இந்த
வீர விவேகானந்தன்...!
சமூக சேவை, சமூக சேவை
என்று கூக்குரலிடும்
பெரிய மனிதர்களின் மத்தியில்
சத்தமில்லாமல் சாதிக்கும்
இளம் நாயகன் .... !
எத்தனை பேருக்கு தெரியும்......?
இவனால்
இவனின் கல்விசேவையினால் பலரின்
கல்வி கண்கள் திறந்திருக்கிறது என்று....
பாராட்டிலும் வெறும் வாழ்த்திலும்
இவனின் சேவைவயிறு நிறையாது..
துணையிருப்போம்..துணையாகவே இருப்போம்..!
இவன்..............
என் கம்பீர தம்பி
இராஜ்குமார் ..........!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி...!
என்றும் நலமுடன்
என்றென்றும் வளமுடன்
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
-இரா..சந்தோஷ் குமார்