வாரம் ஒரு முறை.. நம் நாட்டின் அரசியல் நிகழ்வுகளை...
வாரம் ஒரு முறை.. நம் நாட்டின் அரசியல் நிகழ்வுகளை அலசும் விமர்சன கட்டுரை மற்றும் நையாண்டி பதிவுகள் எழுதலாமா என்கிற யோசனையில் இருக்கிறேன்.
இது இப்போதைக்கு ஒரு சாம்பிள்....
திருவரங்கம்... அதாங்க ஸ்ரீரங்கம். இங்கு நடைப்பெறவிருக்கும் இடைத்தேர்தலில் தி.மு.கழகம் பெருவாரியான வாக்குகளை பெறும். டிபாசிட் இழக்கும் வகையில் தி.மு. க தோற்க வாய்ப்பில்லை. அவ்வாறு தோற்க அ.தி.மு.கழகமே விரும்பாது. மக்களின் முதல்வரை விட அதிகப்படியான வாக்குகளை தற்போதைய அ.தி.மு. க வேட்பாளர் பெற்றுவிட்டாலும் அது அம்மாவின் தோல்வியாக கருதப்படும் ( இது எப்படி இருக்கு ? )
அ. தி.மு. க , வாக்காளர்களை அதிகம் கவனித்தாலும்... கடைசி நேரத்தில் தி.மு.க வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன. ஆம்.. தேர்தல் ஆணையம் விசுவாசமாக இல்லையெனில்..............................!! :)
-இரா.சந்தோஷ் குமார்.