எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மெல்லிய தென்றல் சுமந்துச் செல்கிறது கொத்து மலர்களின் மொத்த...

மெல்லிய தென்றல் சுமந்துச் செல்கிறது
கொத்து மலர்களின் மொத்த வாசத்தை ...
துல்லிய ஓடை நீர் துடைத்துச் செல்கிறது
பரந்தப் பரப்பின் ஆழ் மண் மணத்தை ...
விரல் இடுக்கின் ஒரு திங்கள் அழுக்கை
விரைவாய் தின்று முடிக்கிறது மீன் கூட்டம்
உரல் உள் விரவிய ஓராயிரம் மணிகளை
உலைக்கை பொடித்துப் போடுகிறது எப்போதும்

இவை எல்லாவற்றையும் தன்னுள் பதுக்கி
பரப்ப்ரம்மாய் இன்னமும் இந்தப் பிரபஞ்சம்
மெளனமாய் ஒரு கவிதையை
விடியல் தோறும் எழுதி வருகிறது

வாசிக்கும் விழிகள் விரிவாய் விரிய வேண்டி !!!!!..

எந்தக் கவிதைக்குள்ளும்
ஒரு மனிதன்
இந்தப பிரபஞ்ச அசைவில் ..
எந்தச் சிந்தனையையும் விரித்து
தன்னுள் மனிதத்தை
பூசிக்கொள்ளாத கைகளுக்கு
எழுதுகோல் இருந்தென்ன ..
இல்லாமற் போனால் என்ன ..??..
அன்றியும் பிரபஞ்சம்
இன்னமும் காத்துக்கிடக்கிறது --
ஒரு
'பேனாவுக்காக '
கவிஞனுக்காக
கவிதைக்காக



மனிதனுக்காகவும் கூடத்தான்


-எனும் ஒரு கவிதையை
ஒரு வேளை பிரபஞ்சம் சிந்தித்தால்
என்னவாகும் என் சிந்தனை ? .

பதிவு : agan
நாள் : 7-Feb-15, 4:48 pm

மேலே