எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எங்கள் ஊரின், மேடை நிகழ்ச்சி ஒன்றின் தயாரிப்பிற்கு 10...

எங்கள் ஊரின், மேடை நிகழ்ச்சி ஒன்றின் தயாரிப்பிற்கு 10 வயது குழந்தைகள் இருவர் எதாவது எழுதி கொடுங்கள் அத்தை நாங்கள் அதனை வாசிக்கின்றோம் என்று என்னிடம் கேட்டனர் .

நானும் 'நித்தம் நாமும் அடிமையா?' என்ற தலைப்பில் .................

நித்தம் நாமும் அடிமையா?

சித்திரம் ,போகோ ,நிக் க்கும்
நித்தம் நாமும் அடிமையா?
அண்ணன்,தம்பி உறவிருக்க
பென் டென் ,சோட்டா பீம் ,டோரா எதற்கு?

பார்த்து ரசிக்க இயற்கையும்
பேசி,சிரிக்க பாட்டி,தாத்தாவும்
அன்பான அண்டை வீட்டாரும்
அனைத்தும் கிடைத்தும் தவிர்ப்பதேன்?

விட்டொழிப்போம் தொலைக்காட்சியை
வீதிக்கு வருவோம்
விளையாடி மகிழ்வோம்
நட்புடனே நாமும்
உடல் நலமும் பேணலாம் !


என்று எழுதி கொடுத்தேன் இரண்டு சிறுவர்களும் வாசித்து விட்டு 'இது மட்டும் வேண்டாம் அத்தை
வேற ஏதாவது எழுதி கொடுங்கள் ' என்றனர்.

'சொல்லுகிற படி நடக்க வேண்டும்' என்ற அவர்களின் எண்ணத்தை மதித்து இப்பொழுது வேண்டாம் ஆனால் கட்டாயம் அடுத்த தடவை நீங்கள் தான் படிக்க வேண்டும் என்று சொல்லி விட்டு,

'மகிழ்வுடன் வாழ்வோம்' என்ற தலைப்பில்

மகிழ்வுடன் வாழ்வோம்

அன்பே ஆயுதமாய்
அறிவே பிரதானமாய்

சாதி ,மதம் தொலைத்து
சாத்வீக குணம் அமைத்து

பெற்றோரை மதித்து
பெரியோர்க்கு இணங்கி

ஒழுக்கத்தை விரும்பி
ஓய்வினை குறைத்து

கல்வியில் கரைகடந்து
கண்டதை மட்டும் பேசி

மனதினை அழகாக்கி
மன பேய்களை அகற்றி

உறவுகளை பேணி
உரிமைகளை பெற்று

கடமையை ஆற்றி
கண்ணியம் காத்து

மனிதம் பரப்பி
மகிழ்வுடன் வாழ்வோம்!

அனுமானத்திற்கு முரண்பட்டு
ஆராய்ச்சிக்கு உட்பட்டு
விஞ்ஞானம் மட்டுமே
விடையாய் கொள்வோம்!

அறிவின் வழி நடந்து
அகிலம் ஆள்வோம் !
நாளைய தலைவர்களாய்!


என்று நான் எழுதி கொடுத்ததை மகிழ்வுடன் வாசித்தனர்.


குறிப்பு;
அந்த குழந்தைகள் மட்டுமல்லாது கிட்ட தட்ட 20 சிறுவர் ,சிறுமிகளில் யாருமே 'நித்தம் நாமும் அடிமையா? ' வாசிக்க முன்வரவில்லை .

குழந்தைகளை சீரழிக்கும் ,அடிமைப் படுத்தும் 'குழந்தை தொலைக்காட்சிகள் ...............

பதிவு : gowthami
நாள் : 19-Feb-15, 12:32 pm

மேலே