எவரும் நிச்சயம் வாசிக்கவேண்டிய படைப்பு -----திருமூர்த்தி தேய்த்துவிட்ட மப்பூடு......
எவரும் நிச்சயம் வாசிக்கவேண்டிய படைப்பு
-----திருமூர்த்தி
தேய்த்துவிட்ட மப்பூடு...
*
தோட்டத்தில்
கண்டெடுத்த மயிலிறகு...
*
சில்லிமூக்கு
உடைந்து ஒழுகிய ரத்தம்...
*
இன்னமும் விலை ஏறாத
பூமர் காகிதம்...
*
அக்டோபர் இரண்டுக்காக
அன்பளிப்பாய்ப் பெற்ற
குட்டிப்புத்தகம்...
*
இதயவடிவில்
புழு கொறித்த இலை...
*
ஆசிரியர்களின்
கையெழுத்துக்கள்...
*
அரைத்துண்டான
ஐந்து ரூபாய்நோட்டு...
*
அம்மன் கோவில்த்திருநீர்...
*
நாமெல்லாம்
மதிப்பளிக்கும் தேசியக்கொடி...
*
நோட்டுப் புத்தகங்களுக்குள்
காலச்சுவடுகளாய் இருந்த
பொக்கிஷங்கள் அனைத்தும்
ஐந்தாவது
படித்து முடித்தபிறகு
எடைக்குப் போடப்பட்டதை
நினைக்கும்போதெல்லாம்
மனது
உடைந்த கிளையாய்த்
தொங்கிப்போகிறது....