கச்சையோடு வீதி வந்து பிச்சை என்று கதறியவன் வாய்மொழிந்த...
கச்சையோடு வீதி வந்து
பிச்சை என்று கதறியவன்
வாய்மொழிந்த
பொய்கள் கூட
மறந்திடலாம்...
இச்சைகொண்டு
மேடை போடும் பச்சோந்திகள்
முன்மொழிந்த
வேஷம் ஒன்றும்
மறக்குதில்லையே...
பசிக்காக சொற்பமாய் பறிப்பவன்
திருடன் என்றால்
வசதிக்காக ஏழை வயிறடித்து
பறிப்பவனை என்ன சொல்லலாம்...???
ஊர் தூங்க திருடியவன்
சிறையிலிருப்பது நலமென்றால்...
உலகம் பார்க்க திருடுபவனை .
ஊர் வாழ்த்துவது தான் சிறப்போ..???
வீழ்த்திடுவோம் வீழ்த்திடுவோம்
மீட்சி தேடி விழித்திடுவோம்..!!
..கவிபாரதி...