எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உப்பு காத்தும் உழலும் மனசும் ------------------------------------------------------------------ உப்புக்காத்து வீசயிலே...

உப்பு காத்தும் உழலும் மனசும்
------------------------------------------------------------------

உப்புக்காத்து வீசயிலே ஊட்டம்ரொம்ப குறையுதய்யா
ஊடுவிட்டு போனராசா திரும்பி வந்துபுடு
ஊதகாத்து வீசுமோன்னு பதறுது மனசு ...

குத்தங்குறை ஏதுமில்ல குலதாயி காத்துநிற்பா
கும்மிருட்டை தாண்டிநீயும் கரைக்கு வந்துபுடு
குத்துயிரா கிடந்திங்கே தவிக்குது மனசு ...

அப்பன்ஆத்தா யாருமில்ல ஆயுசும்ரொம்ப நீளமில்ல
ஆதரவே நீதானே அய்யா வந்துபுடு
ஆண்மகனா என்கூட என்றும் வாழ்ந்துபுடு ...

சுத்திசுத்தி கடலிருக்கு கடலுக்குள்ள மீனிருக்கு
சுத்தமான மனசுமட்டும் இல்ல கரையிலே
சுத்திப்போட வேணுமைய்யா உந்தன் வரவில

சுட்டகரு வாடிருக்கு சுண்டக்கஞ்சி தானிருக்கு
சுகமான பொழுதெல்லாம் வாடுது நின்னு
சுவைகூட்ட உன்னையிங்கு தேடுது மண்ணு

பக்கத்தில நீயிருந்தா பசிஎதுவும் தோனலயே
பாவிமக காத்திருக்கா பரிசல பார்த்து
பக்குவமா வந்துபுடு பாதைய மாத்தி

கடலிங்க பொங்குதுனா கட்டாயம் புயலுவரும்
கலங்காதே என்ராசா கலைஞ்சிடும் மெல்லாம்
கடலும்கூட அமைதியாக தூங்கிடும் மெல்ல

சிங்கத்தை கொடியிலேந்தி மனசுபூரா கோழையாக
சிங்களத்து பயபுள்ள வந்து நிற்பானோ
சீக்கிரமா வீடுநீயும் திரும்பிட லாமே

மனுசன மதியாத மானங்கெட்ட பயபுள்ள
மாறிடவா போறாங்க மனம்தேடுது பழச
மானமுள்ள தமிழரெல்லாம் தோன்றனும் புதுசா

கத்தும்கடல் ஓசையிலே காதுரெண்டும் இனிக்காதோ
காததூரம் போயிநானும் பார்த்திட வேணும்
காத்திடணும் கடல்மாதா இளமுசிரத்தான் நீயும்
-----------------------------------------------------------------------
மறுபதிவு ## குமரேசன் கிருஷ்ணன் ##

நாள் : 11-Mar-15, 9:43 am

மேலே