ரசித்த கம்பனின் கற்பனை உச்சம்.....! ---------- விண் இரண்டு...
ரசித்த கம்பனின் கற்பனை உச்சம்.....!
----------
விண் இரண்டு கூற ஆயது பிளந்தது வெற்பு
மண் இரண்டு உறக் கிழிந்தது என்று இமையவர் மறுக
கண் இரண்டினும் தீ உக கதிர் முகப் பகழி
எண் இரண்டினோடு இரண்டு கோர்த்து ஒரு தொடை எய்தான்.
-----
போரில் கும்பகர்ணனின் வீர தீர கோபத்தை இப்படி உவமைப்படுத்துகிறார் கம்பர்.
கும்பகர்ணன் தன் இரு கண்களிலிருந்தும் நெருப்புப் பறக்க , தீ உமிழ்கின்ற பதினெட்டு அம்புகளை ஒரு சேர செலுத்தியதால்... ..
வானம் இரண்டாக பிளக்கிறது. மலை பிளக்கிறது, பூமி இரண்டாக பிளக்கிறது என்பதாக தேவர்கள் மனங்கலங்குகிறார்கள்/
போர் முனையில் கோபத்தின் உச்சத்தை அன்றே கம்பர் எப்படி விவரித்து இருக்கிறார்..... மிரண்டு ரசித்தேன்.
-இரா.சந்தோஷ் குமார்