எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன் தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்...

தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணைநிற்பவன்
அலை முழங்கும் கடல்படைத்து அழகு பார்த்தவன்
அலையின்மீதும் மலையின்மீதும் ஆட்சி செய்பவன்
தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்
தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகாவல்லவன்
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை !
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் - அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை....

காலத்தால் அழியாத பாடல்....... இசைமுரசு நாகூர்ஹனீபாவை என்றும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.....

பதிவு : சிவநாதன்
நாள் : 9-Apr-15, 6:43 pm

மேலே