எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தள நிர்வாகத்திற்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்..!!! சமீப காலமாக...

தள நிர்வாகத்திற்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்..!!! சமீப காலமாக தளம் பல சிறந்த படைப்பாளிகளை கொண்டு மிகவும் சிறந்த படைப்புகளும் பகிரப்பட்டு ஒரு நல்ல ஆரோக்கியமான நிலை நிலவி வருகிறது... மற்ற வலைத்தளங்களில் இருப்பது போலவே இங்கும் சில புல்லுருவிகள்....!! வீணாக விவாதம் செய்வது.. பெண் படைப்பாளிகளை சீண்டுவது என சிற்றின்ப வடிகால்களாக இந்த வலைதளத்தையும் சீரழிக்கிறார்கள்...! எனவே எந்த ஒரு உறுப்பினர் பதிவும் தகுந்த அடையாளங்களோடு பதியப்பட்டால் தளம் இன்னும் சிறக்கும் என்பது என் தாழ்மையான எண்ணம்..!! எப்படி என்றால் உறுப்பினர் பதிவுக்கு முன் பதிவு கோரும் உறுப்பினர்கள் தங்களுடைய அடையாள உறுதியை மென்பதிவு முறையில் தள நிர்வாகத்திற்கு அனுப்பலாம்.!! அதனை தள நிர்வாகம் உறுதி செய்த பின்னரே உறுப்பினர் பதிவு அங்கீகரிக்கப் படும். அங்கீகாரம் இல்லாத உறுப்பினர்கள் பதிவோ கருத்தோ இடமுடியாது என்று விதிகள் வகுத்துக் கொள்ளலாம்.. செய்யும் பட்சத்தில் தளம் இன்னும் சிறக்கும் என்பது என் தாழ்மையான கருத்து...

பதிவு : கட்டாரி
நாள் : 30-Jan-14, 9:04 am

மேலே