தவறுதான் என்ன செய்ய... நரம்புகள் தள்ளாடும் உணர்வுகள் கூத்தாடும்...
தவறுதான் என்ன செய்ய...
நரம்புகள் தள்ளாடும்
உணர்வுகள் கூத்தாடும்
"பொறுத்தார் பூமி ஆள்வார்..."
செல்லுபடியாகாது இங்கே...
மறைவிடம் கிட்டாது இந்த மாநகரில்...
உள்ளுக்குள் உருண்டையொன்று உருண்டோட
உந்துதலின் காரணமாய் உடைந்துபோன நான்
உட்கார்ந்தேன் அவ்விடமே
ஆம்...
"ஆத்திரத்தை அடக்கலாம்..."