துரைசாமி நடராசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : துரைசாமி நடராசன் |
இடம் | : புன்செய்ப் புளியம்பட்டி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 4 |
நான் மென்பொருள் வல்லுநராக சென்னையில் பணியாற்றுகிறேன். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக சிலவற்றைக் கிறுக்கி மகிழ்ந்துகொள்ளும் சாதாரண தமிழ் கிறுக்கன் நான்.
தவறுதான் என்ன செய்ய...
நரம்புகள் தள்ளாடும்
உணர்வுகள் கூத்தாடும்
"பொறுத்தார் பூமி ஆள்வார்..."
செல்லுபடியாகாது இங்கே...
மறைவிடம் கிட்டாது இந்த மாநகரில்...
உள்ளுக்குள் உருண்டையொன்று உருண்டோட
உந்துதலின் காரணமாய் உடைந்துபோன நான்
உட்கார்ந்தேன் அவ்விடமே
ஆம்...
"ஆத்திரத்தை அடக்கலாம்..."
அன்பே!
கொசு கடித்தால் அடிக்காதே
நீ அடிப்பதற்காகவே அது கடிக்கிறது...
சுவடுகள்...
"உங்க பொண்ணு வயித்துல உதைக்கிறாள்"
என் மனைவி சொன்னாள் தொலைபேசியில்...
அட...
என் காதோரம் பாதச்சுவடு...
புதியதோர் உலகு உனக்கு - ப்ரியன்
கிரிக்கெட் சீரியலில்
யாவரும் மூழ்கிட
விளம்பரங்களில்
விருப்பம் உனக்கு
காலை மாலை
வைத்திருந்தாலும் ஓட
கண்டுதும் பெரியது
தாய்தான் உனக்கு
தேனும் பாலும்
கொடுக்க இருந்தும்
திண்றிட பிடிக்கும்
மண்தான் உனக்கு
பகல் முழுவதும்
விழித்து இருந்தாலும்
இரவிலும் விளையாடிட
ஏக்கம் உனக்கு
பஞ்சு மெத்தை
பட்டு இட்டாலும்
அன்னை மடியில்தான்
ஆசைகள் உனக்கு
ஒரு பிணத்தின் அழுகை
கண்டவங்க கண்ணுதான் பட்டுப்போச்சோ?
காலனுக்கும் உன்ன பிடிச்சுப்போச்சோ?
இல்லை உன் காலமுந்தான் முடிஞ்சுபோச்சோ?
நீ முட்டி முட்டி குடிச்சுத் தள்ளும்
முலைப்பாலும் சொட்டுதடா
சிந்திய கண்ணீருல சிலது கலக்குதடா
மண்ணாள வந்தவனை மண்ணுக்குதான் தருவேனோ
மன்னா உன்ன தந்துபுட்டு மனுசி நானும் வாழ்வேனோ
கட்டிவச்ச தொட்டில் சேலை காத்துலதான் ஆடுதடா
கண்ணே நீ எங்கன்னு கண்ணாபின்னான்னு தேடுதடா
உம்மூத்திர வாசம் வந்து நாசியை நனைச்சுப் போக
உசுரோட வாசமும் கொஞ்சம் உறங்கித்தான் போகுதடா
(...)
முதிர்கன்னியின் முனகல்
-----------------------------------------
வருக்ஷம் பத்து முன்னே
வயசுக்கு வந்தேனே
வண்ணக் கனவோட
வாக்கப்பட நின்னேனே
பாத்துவச்ச மாப்பிள்ளையோ
பரலோகம் போய்விட
பாவிமக அப்படின்னு
பாத்தவங்க சொன்னாங்க
விட்டத்த வெறச்சு பாத்தே
விறகாச்சு என் உடம்பு
விலக்கி வச்ச ஊருக்குள்ள
விலை போகா சரக்காச்சு
கல்யாணம் ஆகலையே
கன்னி உடல் கசங்கலியே
கரையேறி மேலவர
கரம் யாரும் கொடுக்கலியே
முடியும் நரைச்சுப் போச்சு
முகமெல்லாம் தொங்கிப் போச்சு
முடி (...)
சுவடுகள்...
"உங்க பொண்ணு வயித்துல உதைக்கிறாள்"
என் மனைவி சொன்னாள் தொலைபேசியில்...
அட...
என் காதோரம் பாதச்சுவடு...
பிரளயம் தன் கோர தாண்டவத்தை அரங்கேற்றிச் சென்றதைப்போல காட்சியளித்துக் கொண்டிருந்தது அந்தப் பெருநகரம்.
மனித நடமாட்டமற்ற அதன் பிரதான வீதிகள் எங்கும் கண்ணாடிச் சிதறல்கள்,இரத்தக் கறைகள்,கரிந்துபோய் எலும்புக்கூடாய் நிற்கும் வாகனங்கள்.
மனிதக் கால்களின் வேகத்தையும் தடுமாற்றத்தையும் முத்திரை பதித்ததுபோல் கவிழ்ந்தும் ஒருக்களித்தும்,பல அளவுகளில் புதியதும் பழையதுமான செருப்புகள்..,
வீசிய காற்றில் சாம்பல்புழுதி,வீதிநெடுக இருபுறமும் எரிந்து அடங்கிய பின்னும் கடைகளுக்குள் மிச்சமிருந்த கருகியநெடி…போக்குவரத்தற்ற சாலைகளின் பரப்பில் எழும்பிக் கொண்டிருந்த கானல்..,‘நகரத்தின் இயக்கத்திற்கும், தொழிலுக்கும் மு
அப்பாக்கள்
-------------------
நாம் அழுதால் சிரிப்பு மூட்டும்
கோமாளிகளாகவும்...
சிரித்தால் ஏமாந்துபோகும்
ஏமாளிகளாகவும் இருப்பவர்கள்
அப்பாக்கள் மட்டும்தான்...