ஒரு பிணத்தின் அழுகை கண்டவங்க கண்ணுதான் பட்டுப்போச்சோ? காலனுக்கும்...
ஒரு பிணத்தின் அழுகை
கண்டவங்க கண்ணுதான் பட்டுப்போச்சோ?
காலனுக்கும் உன்ன பிடிச்சுப்போச்சோ?
இல்லை உன் காலமுந்தான் முடிஞ்சுபோச்சோ?
நீ முட்டி முட்டி குடிச்சுத் தள்ளும்
முலைப்பாலும் சொட்டுதடா
சிந்திய கண்ணீருல சிலது கலக்குதடா
மண்ணாள வந்தவனை மண்ணுக்குதான் தருவேனோ
மன்னா உன்ன தந்துபுட்டு மனுசி நானும் வாழ்வேனோ
கட்டிவச்ச தொட்டில் சேலை காத்துலதான் ஆடுதடா
கண்ணே நீ எங்கன்னு கண்ணாபின்னான்னு தேடுதடா
உம்மூத்திர வாசம் வந்து நாசியை நனைச்சுப் போக
உசுரோட வாசமும் கொஞ்சம் உறங்கித்தான் போகுதடா
அடிவயித்து சுருக்கங்கூட மாறலியே
நீ வந்த தடத்தின் வடுகூட மறையலியே
தொப்புள் கொடியுங்காயலியே உன்ன
தொட்டுப்பாத்த சுகமின்னும் தீரலியே
நீ போனவுடன் செத்துப்போச்சு பாதி உசுரு
புதச்ச சேதி கேட்டப்போ
மரிச்சுப்போச்சு மீதி உசுரு
பொணமிங்க அழுகுதய்யா
புள்ளயக் காணமுன்னு தேடுதய்யா...