இநதிய விவசாயம் இநதிய விவசாயம் இந்தியா ஓர் விவசாய...
இநதிய விவசாயம்
இநதிய விவசாயம்
இந்தியா ஓர் விவசாய நாடு
என்று சொன்னார்கள், சொல்கிறார்கள்
இப்படி சொல்லி சொல்லி
பச்சை நிறம் சாயம் போய்விட்டது...
==============================
இப்படி, நிலைமை போனால்
நம்
மூவர்ணகொடியிலும்
இரண்டு வர்ணம்தான் மிஞ்சும்,
பச்சை நீங்களாக..............
===============================
தக்காளிக்கு தகுந்த விலை இல்லை!
வெங்காயத்திற்கு வெளி நாட்டில் விலை!
சீன பூண்டு சிறகடித்து பறக்கிறது இங்கு..
இப்படி இநதிய விவசாயம் பரிதவிகிறது!
===================================
பசுமை புரட்சியால்
பக்கத்துக்கு மாநிலத்தின்
தண்ணீர் கூட பெற முடியவில்லை....
விளைவு
நாம் உண்ணும் அரிசியில் அந்த பெயர்கள்.....
====================================
சில நேரம்
அவன் காட்டில் மழை பெய்தும்,
விழிகளில் கண்ணீர்
காரணம் - 'தரகு'
தரகு என்ற சொல் - உழவனை
தரை மட்டம் ஆக்கிவிட்டது!
==================================
பசுமை புரட்சி செய்த
இடங்கள் எல்லாம் - இன்று
நீரில்லாமல் கருமையாகி,
வெண்மை புரட்சி என்ற பெயரில்
வெள்ளை பணங்களாக விலை போய்விட்டன .............
=======================================
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்