இத்தளத்தில் இணைந்து சரியாக ஒரு வருடம் ... இது...
இத்தளத்தில் இணைந்து சரியாக ஒரு வருடம் ...
இது வரை
60 (அறுபது) கவிதைகள் ..
மூன்றே மூன்று கட்டுரைகள்..
17 பதிவுகள்..எண்ணங்கள் பகுதியில்..
மட்டுமே..பதிவு செய்து..
ஆனால்.. தனது வசம் ஆயிரக்கணக்கில் கவிதைகள் .. பல விருதுகள்.. என்று வைத்திருக்கும் இவர்..
இத்தளத்தில் என்னைப்போன்ற எழுத்து மாணவர்கள் முதல் ஜாம்பவான்கள் வரை எழுதுபவர்களின் படைப்புகளை இடைவிடாது படித்து, உள்வாங்கி, உணர்ந்து, பரந்த மனதுடன், குற்றம் காணாது, தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகள் /பின்னூட்டங்கள் இட்டிருப்பதன் தொகை இன்றுவரை..
12847 (பன்னிரண்டாயிரத்து எண்ணூற்று நாற்பத்து ஏழு) ..
சகோதரர்.. ஜின்னா அவர்களின் இப்பணியால் வளர்பவர்களின் நினைவில் நிற்பார் இவர் என்றும்..அவர்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களை பெற்றபடியே இருப்பார் எந்நாளும்..
மிக்க நன்றி ஜின்னா!