விஜய் நடித்துள்ள புலி அடுத்த மாதம் திரைக்கு வருகிறது....
விஜய் நடித்துள்ள புலி அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இது விஜய்யின் 58 -வது படம். இதையடுத்து அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் தொடக்கவிழா சமீபத்தில் நடந்தது. தாணு படத்தை தயாரிக்கிறார்.
விஜய்யின் 60 -வது படத்தை யார் இயக்குகிறார்கள்? ஒரு டஜன் இயக்குனர்கள் விஜய்யின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய்க்கு நெருக்கமான வட்டாரம் தகவல் ஒன்றை கசியவிட்டுள்ளது.
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா விஜய்யை சந்தித்து கதை ஒன்றை கூறியிருக்கிறார். அது விஜய்க்கு பிடித்துள்ளது. அதனால், அவரது 60 -வது படத்தின் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.
சுமார் 15 வருடங்களுக்கு முன் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் குஷி படத்தில் விஜய் நடித்தார். விஜய்யின் பிளாக் பஸ்டர் படங்களில் அதுவும் ஒன்று என்பதால் இந்த கூட்டணியை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க வாய்ப்புள்ளது.