எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யாக்கூப் மேமன் தேசத் துரோகி - கருணைக்கு அருகதையற்றவன்...

யாக்கூப் மேமன் தேசத் துரோகி - கருணைக்கு அருகதையற்றவன்
1993 மும்பை குண்டு வெடிப்புகளை நாம் இன்னும் மறக்க முடியாது. திட்டமிட்டு தொடர்ச்சியாகப் பல இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்துப் பல உயிர்கள் பலியாகவும், பலர் நிரந்தர ஊனமடையவும் காரணமான இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியவன் தாவூது இப்ராகிம் என்ற சர்வதேச பயங்கரவாதி. தாவூது தன் அடியாளான டைகர் மேமன் என்பவன் மூலம் செய்தான் என்ற குற்றச்சாட்டையும், இந்த குண்டு வெடிப்பு இந்தியக் கள்ளக் கடத்தல்காரர்களான ஹாஜி அகமது, ஹாஜி உமர், தாரி ஜாலியாவாலா ஆகியோரின் நிதி உதவியுடனும் பாகிஸ்தானிய கள்ளக் கடத்தல்காரன் தாவூது ஜட் என்பவனது உதவியுடனும் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டும் உண்டு. உச்சநீதிமன்றத்தில் வழக்காடி குற்றவாளிகளுக்கு எதிரான தீர்ப்பினைப் பெற்ற போதும் மும்பை போலீஸ் தாவூது இப்ராஹிம், டைகர் மேமன் ஆகிய முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்ய இயலவில்லை. அவர்கள் பாகிஸ்தானில் ஐஎஸ்ஐ பாதுகாப்பில் உள்ளதாகத் தகவல். சிக்கிவிட்ட யாகூப் மேமன் என்ற குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு அது இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் யாகூப் மேமன் அப்பாவி, அவனது அண்ணன் செய்த பாவத்துக்கு அவன் எப்படிப் பொறுப்பாவான், அவன் விரும்பியிருந்தால் பாகிஸ்தானிலோ அரபு நாடுகளிலோ ஒளிந்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாமே என்றெல்லாம் மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பரிக்கின்றனர்.

”1993 ஜனவரியில் நூற்றுக்கணக்கான ஏகே47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், மூட்டை மூட்டையாக வெடிகுண்டுகள், டன் கணக்கில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகள் 300 வெள்ளிக்கட்டிகள் ஆகியவற்றைக் கடத்தி அனுப்பினான். ஜனவரி 9 1993 அன்று காவல்துறையினரைத் தாக்கி மும்பையில் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஒரு கும்பல் ஈடுபட்டது. அப்போது அரசு எந்திரம் முழுவதுமாக மும்பை கலவரம் வேறு ஊர்களில் பரவாமல் தடுக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்க ஆளில்லாத ராய்கட் மாவட்டக் கடற்கரைகளில் சத்தமின்றி மீன்பிடிப் படகுகளில் ஆயுதங்களை இறக்கினார்கள். பல லாஞ்சுகளில் ஆயுதங்கள் வந்து இறங்கின. நாங்கள் பலர் அதை இரண்டு லாரிகளில்
ஏற்றினோம். அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்றோம். வழியில் போலீஸ் மடக்கியது. வெள்ளிக்கட்டிகள் கொண்டு போகிறோம் என்று சொல்லி 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள 7 வெள்ளிக்கட்டிகள் கொடுத்தோம். அதன்பிறகு போலீஸ் எங்களைப் போகவிட்டது. அங்கே ஆயுதங்களை ஒரு லாரியில் ஏற்றி அப்தில் கயூம் சஜ்ஜனி, மோட்டா என்கிற அமீர் ஜாடியா, பாபு மதராசி ஆகியோர் குஜராத்துக்குக் கொண்டு போனார்கள். மீதமிருந்த குண்டுகள், துப்பாக்கிகள், வெள்ளிக்கட்டிகளை நாங்கள் அகர்வாட் கிராமத்தில் ஷபிர் குரேஷி என்ற அடியாளின் வீட்டில் பதுக்கினோம்” என்பதும் சலீம் மிரா ஷேக் போலீசிடம் சொன்னது.

பதிவு : அருண்ராஜ்
நாள் : 1-Aug-15, 1:02 pm

மேலே