எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அரசியல்வாதிகள், கார்ப்பரேட்டுகள், மதவாதிகளால் மாற்றியமைக்கப்படும் இந்திய சமூகம் எழுத்துரு...

அரசியல்வாதிகள், கார்ப்பரேட்டுகள், மதவாதிகளால் மாற்றியமைக்கப்படும் இந்திய சமூகம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய அரசமைப்புச் சட்டம், பொதுஉடைமை, மதச் சார்பின்மை, நேர்மை ஆகியவற்றை தனது கொள்கைகளாகக் கொண்டது.

இந்திய மக்கட்தொகையில் 90% விளிம்பு நிலை மற்றும் நடுத்தர மக்களும், 10% மேல்தட்டு மக்களும் உள்ளனர். ஓர் உயர் ஜனநாயகம் என்பது அனைத்து குடிமக்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

மேல்தட்டு மக்களின் நலனுக்காக 90% மக்களின் மீது திணிக்கப்படும் சட்டங்களை,அரசியல்வாதிகளின் சதி என அறியாமல் அதனை தன்னு டைய விதி என எண்ணிக்கொண்டு பொறுத்துக் கொண்டு செல்லும் மக்களே இங்கு அதிகம்.தன்னுடைய வாழ்வின் மீது திணிக்கப்படும் அரசி யல் சூழல்கள், தன்னை மேலும், மேலும் கீழ் நோக்கி அழுத்துவதோ, தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு எதி ராக, தன் மீது அதிகாரம் செலுத்து வதோ, இவர்களுக்கு பழகியோ அல் லது புரியாமலோ போய் விடுகிறது.

சமூக நலன் கருதி உண்டாக்கப் படும் சட்டம் அல்லது சட்டத் திருத்தங்கள் ஏற்கப்பட வேண்டியதே. ஒரு சிலர் நலனுக்கென உண்டாக் கப்படும் மாற்றம் தனி நபர் வளர்ச் சிக்கு மட்டுமாகவே இருக்க முடியும். இன்னமும், அது ஒட்டு, மொத்த சமூகத்திற்கும் எதிராகவே அமையும்.

அரசியல்வாதிகள், சாதாரண குடி மக்கள் இவர்களுக்கான வெளிப் படையான தொடர்பு வாக்கு மட்டுமே. எந்த ஒரு பிரச்சினைக்கும்,தெரு முனை பிரச்சாரத்தைவிட, சட்டமன்றத் தீர்மானங் களைவிட வலுவானவை.அப்படிப் பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், தீர் மானங்களுக்காக மக்களால் அனுப்பி வைக்கப்படுகின்ற அரசியல்வாதிகள் முதலாளித்துவத்தை வளர்ப்பதற்கும், மத வாதத்திற்கு ஆதரவாகவும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

ஏழைக் குடிமகன் பயன்படுத்தும் தண்ணீர், தீப்பெட்டி முதல் உடுத்தும் உடை, உணவு, மருந்து என அனைத் திலும் வரிகளை மட்டும் பெற்றுக் கொண்டு, அவன் நலம் சார்ந்து இயங் காமல் கூறுபோட்டு இந்திய நிலங்களை தாரை வார்த்து மீண்டும் தொழில் அடிமைகளாக மக்களை மாற்றும் முயற்சி எப்படி வளர்ச்சி என்றாகும்? ஒரு பக்கம், அளவுக்கு அதிகமான வீக்கமும், மறு பக்கம் வறுமையில் வற்றிய நிலையும் எப்படி ஒட்டுமொத்த வளர்ச்சி என்றாகும்?

இந்தியாவின் வளர்ச்சி! வளர்ச்சி!! என ஊடகங்கள் மூலம் குடுகுடுப்பை அடித்ததே கார்ப்பரேட்கள் தானே?

அந்நிய நிறுவனங்களே தொழில் தொடங்க வாருங்கள்! வாருங்கள்!! என அழைப்பு விடுத்து அவர்களுக்கு ஏற்றபடி சட்டங்களைத் திருத்திக் கொடுத்து, முத லாளித்துவத் தொப்பையை வளர்க்க பாடுபட்டு, கிடைக்கும் வேலை வாய்ப்பு களை இந்திய மக்களுக்கு வெகுமதி என்பது இன்னும் வேதனையானது; நாய்க்கு தூக்கி எறியும் எலும்புத் துண்டுகள் போன்றது.

அந்நிய நேரடி முதலீடு ,நாட்டின் வளங்களை சுரண்டும் வாய்ப்பாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு அமையும். அன்றியும், உள்நாட்டு மக்களின் உடல் உழைப்பையும் சுரண்டும். மீண்டும் ஒரு கிழக்கிந்திய கம்பெனிக்கு வழி வகுக்கும். பெரும் முதலாளிகளுக்கு, வரிச் சலுகை, கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடி, ஏழை விவசாயி 5000 ரூபாய் வங்கிக்கடன் செலுத்த இயலாமல் தற்கொலை - இந்த முரண் இந்திய நாட்டில்.

சமமற்ற பொருளாதாரம் உள்ள இந்த நாட்டில் முதலாளித்துவமும், ஜனநாயக மும் எதிர், எதிராவே இருக்க முடியும். அரசியல் கட்சித் தலைவர்களும் குடி மக்களின் பிரதிநிதி என அல்லாமல் பெரும் முதலாளிகளின் தோழனாக இருப்பதும் ஜனநாயகத்திற்கு எதிராகவே அமையும்.

அய்ரோப்பாவில் அறிவு வளர்ச்சி குன்றிய காலம் - அது, திருச்சபை எழுச்சிக்காலம். மதவாதமும், நாட்டின் வளர்ச்சியும் நேர் எதிரானவை. மத வாதம், வளர்ந்தால் கட்டுப்படுத்தவோ, மட்டுப் படுத்தவோ இயலாது. ஏனெ னில், மதம் மக்களின் மூடத்தனமான, வறட்டு உணர்வு.

அரசியல் நகர்வுகளைக் கணிக்க முடியாமல் மக்களைத் திசை திருப்பி விடும் மத வாதிகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களைத் தூண்டி விடும் பாசிசம் விடமானது. சுற்றுச் சூழல் தொடர்பு உணர் வற்ற மாக்களாக, மத போதை மதுவேற்றி மக்களை அலைய விட்டு, புறச்சூழல் அறியாவண்ணம் அகத்தை கல்லறை நிலையில் வை என யோகம் கற்றுத்தந்து மதவாதிகள் நாடகமாடுகின்றனர்.

சுய ஜாதி கவுரவம் பேசித் திரி கின்ற இடைநிலை ஜாதி இளை ஞர்கள் மத்தியில் வர்ணாசிரம கொள் கைகளை மறைத்து இந்து, நாட்டின் வளர்ச்சி என வேடமிட்டு நாட்டின் வளங்களையும், நிலங்களையும் பன் னாட்டு நிறுவனங்களுக்கும், இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் தாரை வார்க்க ஆயத்தமாக உள்ளது இந்திய அரசு . அரசியல் வாதிகள் + கார்ப ரேட்டுகள்+மதவாதிகள்=மாற்றப்படும் இந்தியச் சமூகம்.

- கவுதமி தமிழரசன்,
மேலமெய்ஞானபுரம்

பதிவு : gowthami
நாள் : 11-Aug-15, 11:52 am

மேலே