எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னவளே! ஆயிரம் கவிதைகள்  தருகிறேன்.உன் பாதத்தின் அழகை வர்ணித்து. ...

என்னவளே! ஆயிரம் கவிதைகள் 
தருகிறேன்.உன் பாதத்தின் அழகை வர்ணித்து. 

அவள் புன்னகை உலகின் எட்டாவது அதிசயம். 
என் கண்ணீர் ஞாபகப்புத்தகத்தில் எழுதப்படாத துர்ப்பாக்கியம். 

சாப்பிடும் நேரம் சைவ உணவு உண்பேன். 
அவள் நினைத்தாலோ தெரியாது தொண்டையில் 
மீன் முள் குத்தும். 

அவள் வாசலோரம் ஆயிரம் தடவைகள் 
சென்றாலும் பாதங்கள் அழுத்துப்போவதுமில்லை. 
கண்கள் ரெண்டும் ஒச்சமற்ற முத்துக்கள் 
ஒளிவிடும் வைரங்கள். 

ஏழு கிரகங்களில் பூமியும் கர்வம் கொள்கிறது 
அவளது பிறப்பால்....,அவள் புத்தகம் சுமந்து 
எங்கே செல்கிறாள் பூக்களின் மாநாட்டிற்கா.... 

அவள் வியர்வை துடைப்பதற்கு தாயரிக்கப்பட்ட 
கைக்குட்டை நான்...,நூறு கோடி மலரிடமும் 
நுகர்ந்ததில்லை அவளது வியர்வையின் வாசத்தை. 

கைரேகையில் ஜாதகம் பார்த்தேன் 
அவள் இதழ் ரேகையில் காதலைக் கண்டேன். 

ஊஞ்சல் ஒன்று கட்டித்தருகிறேன் 
என் கைகளில் இருந்து கொள். 
உன் முரப்புக்கூட அழகாய் இருக்கிறது 
கன்னத்தில் குழி விழுவதனால்...., 

விழிகளில் என் கனவை வாங்காதே!!! 
உன் தூக்கம் கேட்டு விடலாம். 
வேதம் கற்று மதம் மாறினாயா? 
நெற்றியில் ஒற்றை முடி நீள் பொட்டிடுகிறது. 

கட்டிடக் கலைஞர்கள் பிதாகரஸ் 
தேற்றம் உன் வெண்மாளிகை 
அடுக்கு வரிசை பற்களிலா கற்றார்கள். 

நீ தொலை தூரத்தில் மார்க்கம் 
கற்க சென்றுவிட்டாய்,நானும் 
உன் மார்க்கமே வந்து கொண்டிருக்கிறேன். 

அதிகாலையில் வேதம் ஒதுகிறாய். 
உன் வாசலோரம் புண்ணியத்திற்காய் 
தரிசிக்கும் அடியான் நான், 

புன்னகைக்கும் நேரம் கன்னங்களில் 
குழி விழுகிறது.அதனை ஏணிப்படியாக்கி 
உன் இதயத்தில் நுழையவா....???? 

அழகே! நிலவை பார்க்காத 
உன் முகத்திலும் தூசுக்களாய் 
பருக்கள் படியலாம். 

நிலவும் நீயும் ஒன்றே!! 
அது வெண்ணிலா. 
நீ பெண்ணிலா. 

காதலியின் விழிகளை 
பார்க்க ஐயப்படுகிறேன். 
கவிஞர்களுக்கு வரிகள். 
காதலனுக்கு வலிகள்

பதிவு : ulaganathan
நாள் : 11-Aug-15, 12:58 pm

மேலே