எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அய்யா வந்தார்.... அம்மா வந்தார்.. அண்ணாவும் வந்தார்... நாளைக்குத்...

அய்யா வந்தார்.... அம்மா வந்தார்..
அண்ணாவும் வந்தார்...
நாளைக்குத் தம்பியும் வருவார்...
எப்போதாவது நண்பனும்
வருவார்...
எல்லோரும் கூட்டமாகவும்
வந்தார்கள்...
வந்தவர்கள் எல்லோரும்
தவறாமல் சொன்னார்கள்.... நான்
உங்களில் ஒருவன்...
சொன்னவர்கள் தனியாகவே
நின்று கொண்டிருக்க .... நாங்களும்
கூட்டமாகவே
கேட்டுக் கொண்டிருக்கிறோம்....

பதிவு : கட்டாரி
நாள் : 3-Sep-15, 11:34 am

மேலே