என்னை மிகவும் கவர்ந்த கதாசிரியர் .. நமது எழுத்து...
என்னை மிகவும் கவர்ந்த கதாசிரியர் .. நமது எழுத்து தளத்திலிருக்கும் திருமூர்த்தி.
குடிப்பவர்களின் வயிறு மட்டுமே எரிகிறதே தவிர,அவர்களுடைய வீட்டில் அடுப்பு எரிவதில்லை!.அவர்களுடைய வீட்டில் உலை கொதிக்கிறதோ இல்லையோ,அந்தவீட்டுப் பெண்களின் நெஞ்சு கொதிக்கிறது!
திருமூர்த்தியின் “ 32 ரூபாய்” சிறுகதையில் இடம்பெற்ற வர்ணனையே இவை.. திருமூர்த்தியின் எழுத்தாளுமைக்கு இது ஒரு சாட்சி தான் ..
ஒரு பள்ளி மாணவி பூப்படையும் ... நிகழ்வை.... கதையில் சொல்கிறார்.. எப்படி என்று கவனியுங்களேன்.. ...
“தேசியகீதம் பாடும்போது கண்மணிக்குள் ஒரு படபடப்பு....தேசியகீதம் முடிந்து மௌனம் அனுசரிக்கப்பட்டது.எல்லோரும் தலைகுனிந்து பிராத்தனை செய்கின்றனர்.கண்மணியால் முடியவில்லை.வயிற்றைப் பிடித்துக்கொண்டாள்.அது அவளுக்கு நடந்துவிட்டது.ஆமாம்! மௌனத்தில் மலர்ந்துவிட்டது பதினாறு வயதுப் பருவமலர். ”
சரி.. அதென்ன ” 32 ரூபாய்..” என யோசித்தால்..
இந்த இணைப்பை சுட்டி வாசித்து பாருங்கள்.
முப்பத்தி இரண்டு ரூபாய் (கிளிக் இட் )
வாழ்த்துகள்.. திருமூர்த்தி.!!. ஒரு சிறந்த கதாசிரியராக மிளர்கிறீர்கள். !!
அன்புடன்
இரா.சந்தோஷ் குமார்.