எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"புலம் பெயர் தமிழர்களை" இலங்கையில் அதுவும் கொழும்பில் இலகுவாக...

"புலம் பெயர் தமிழர்களை" இலங்கையில் அதுவும் கொழும்பில் இலகுவாக அடையாளம் காண சில வழிகள் !!!!!!

1. முக்கால் காற்சட்டை அணிந்து இருப்பார்கள் - அது முழுக் கால்சட்டை போல் தோற்றமளிக்கும் !

2. வெள்ளை நிற sports shoe அணிந்து இருப்பார்கள் !

3. சிவப்பு / நீலம் / மஞ்சள் நிறங்களில் தலைக் கவசம் போல் உள்ள ஒரு headset அணிந்து கொண்டு தலையை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள் - listening songs ஆம் !

4. கழுத்தில் சின்னப் பிள்ளைகள் போடுவது போல் பெரிய water bottle bag ஒன்னு இருக்கும் - கேட்டால் NIKON / CANON / FUJI camera வாம் !

5. கட்டாயமாக ஒரு செங்கல்லு கையிலே - iphone ஐ சொன்னேன் !

6. மாலை நேரத்திலும் ஒரு கறுப்பு நிறக் கண்ணாடி & இடுப்பில் ஒரு small bag !

7. மாடு சுவற்றில் தலையை உரசியது போல் ஒரு hair style !

8. 9.30pm bus இக்காக ராமகிருஷ்ண bus stand இல் wait பண்ணும் போதும் கூட phone & ipada/tab இலே அமெரிக்க ஜனாதிபதியை விட பிசியாக இருப்பது போல் ஒரு action !

9. பஸ்ஸிலே ஏறி உட்காந்த பிறகு ipad இலேதான் படம் பாப்பாங்க , bus tv இல பாக்க மாட்டாங்க !

இப்படி ஒருத்தன் எனக்கு பக்கத்தில் வந்து இருந்தான்யா RAJA bus இல் !
நன்றாக உற்றுப் பார்த்தேன் - நன்கு பரிச்சியமான முகம் - அப்படியே டுபாய் போய் வந்த நம்ம அண்ணே "வடிவேலுதான்" ஞாபகத்துக்கு வந்தார் !!!!!!!!!!!!!!!!!!

Awkward moment - நம்ம ஊரு பஸ் ஏசி தெரியாம நம்ம அண்ணே பெட் ஷீட் எடுக்காம குளிரில் நடுங்க , அதை நான் பார்த்து ரசிக்க !!!!!!!!!!!!!!!!!!!!!!!

- சொந்த அனுபவத்தில் எழுதியது -

பதிவு : தியூபன்
நாள் : 22-Feb-14, 3:05 pm

மேலே