எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்புள்ள தளத்தின் தோழமைகளுக்கு வணக்கம்... இன்று 11.10.2015 ஞாயிறு...

அன்புள்ள தளத்தின் தோழமைகளுக்கு வணக்கம்...

இன்று 11.10.2015  ஞாயிறு தினமலர் வாரமலரில்(சென்னை  பதிப்பு  )  அய்யா ...அப்துல்  கலாம்  பற்றி  நானெழுதிய  கவிதை பிரசுரமாகி உள்ளதை உங்கள் மேலான சமூகத்திற்கு தாழ்மையுடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்........இந்த வெற்றி நீங்கள் தந்த வெற்றி....
இதோ அந்த கவிதை......

அணு நாயகன் அப்துல் கலாம் - 

 

மதம் பிடிக்கா மனிதர்
மனித நேயப் புருஷர்
தமிழ் படித்த விஞ்ஞானி
தமிழுக்கு கிடைத்த ஞானி

எத்தனையோ பேர்
இப்பதவிக்கு வந்தபோதும்
நீர் வந்த போதுதானே
குடியரசு தலைவரென்ற கோபுரப் பதவி
சந்தனத்தை பூசிக் கொண்டது .

எத்தனையோ பேர்
தொட்டுப்போன நாற்காலியில் நீர் அமர்ந்த பிறகுதானே
பட்டுப் பீதாம்பரங்கள் பாரம்பரியத்தை உதறித் தள்ளி
பருத்திஆடையில் பேசிக் கொண்டது.

மனப்பாடுகள் தீர
மனப் பாடங்கள் தந்தவர்
கணப் பாடுகள் மீற
கனவு காணச் சொன்னவர் .

சின்னத்திரையிலும் வண்ணத்திரையிலும் நடிக்காமல்
எண்ணற்ற இளசுகளின்
மனத்திரையிலும் மானசீகத்திலும்
வாழ்ந்த கதாநாயகர்.

இவரின் வருகைக்குப் பிறகுதான்
கரிசல் காட்டுக்கும் கனவு வந்தது ...
இவரின் இருக்கைக்குப் பிறகுதான்
இஸ்ரோ தன் சிறகுகளை சிலிர்த்தது....

சாமானியனுக்கும்
சாம்ராஜ்ய பாசை சொல்லிக் கொடுத்த சாக்ரட்டீஸ் நீர்
சாதிக்க சொல்லியே
சரித்திரத்தை சரியான பாதைக்கு ஓட்டிய சாரதி நீர்.

எவர் வருவர் உம்போல்
எவர்வரினும் இணையோ உம்தாள்போல்
எம்மான் நீர் வாழ்க
இந்து சமுத்திரமாய்
நீர் வாழ்க!!!.

 
சுசீந்திரன்.

நாள் : 11-Oct-15, 9:56 am

மேலே