படித்ததில் பிடித்தது; அய்யாவடி பிரத்யங்கரா தேவி " தஞ்சாவூர்...
படித்ததில் பிடித்தது;
அய்யாவடி பிரத்யங்கரா தேவி "
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் ஐவர்பாடி என்று பெயர் பெற்ற இருக்கும் ஒரு கிராமம் ஆகும். தற்போது அய்யாவாடி என்றழைக்கப்படுகிறது.
இங்குதான் பிரத்யங்கரா தேவி வாசம் செய்து வருகிறாள். சக்தியின் உக்கிரமான வடிவம்தான் மஹா பிரத்யங்கரா. இந்த பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடு எட்டு கைகளோடு, மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காட்சி தருபவள்.
நரசிம்மர் பிரஹலாதனுக்காக இரண்யனை வதைக்க சிங்க உருவமெடுத்தபோது, அதிலிருந்து விடுபட முடியாமல் தன் வேகத்தைக் குறைக்க முடியாமல் நல்லவர்களையும் துன்புறுத்த துவங்கியபோது, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்கள். சிவபெருமான் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, நரசிம்மமூர்த்தியின் உக்கிரத்தை தடுப்பதற்காக பறவையும், பூதமும், மிருகமும் கலந்த ஒரு புதிய வடிவை எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன. அந்த வடிவுக்கு சரபேஸ்வரர் என்று பெயர். அந்த சரப வடிவத்தின் இறக்கைப் பக்கம் இருப்பவள் இந்த பிரத்யங்கரா தேவி.
இந்த பிரத்யங்கரா சிவனின் ஒரு பக்க சக்தி. அந்த சக்தியை தனியே வைத்து, அதற்கு தனியாக கோயில் கட்டி அய்யாவாடி என்கிற ஊரில், மக்கள் பூஜை செய்து வணங்கி வருகிறார்கள். ஐவர்பாடி என்று பெயர் பெற்ற இந்த கிராமம் தற்போது அய்யாவாடி என்றழைக்கப்படுகிறது. இங்குதான் நம் பிரத்யங்கரா தேவி வாசம் செய்து வருகிறாள்.
கோவிலின் தொன்மை[தொகு]
இந்தக் கோவிலின் தொன்மையைப் பற்றியும், பழமையைப் பற்றியும், வழிவழியாக பல விஷயங்கள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன..
தலச்சிறப்பு : பிரத்யங்க தேவிக்கு அமாவாசை தோறும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை யாகம் நடைபெறும். இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பகை அகலும். பல நன்மைகள் கிட்டும், பஞ்சபாண்டவர்கள் வழிபட்டதால் ஐவர் பாடி எனப் பெயர் பெற்றதாக கூறுவர்.
தல வரலாறு : பஞ்சபாண்டவர்கள் தேசத்தை இழந்து, அவமானத்தை சந்தித்து, துக்கமும் வேதனையும் பொங்க, இங்கே சுற்றித் திரிந்தனர் ஐவரும். சுடுகாடுகளுக்கு நடுவே இருக்கும் ஒரு பகுதியைத் தேடி அலைந்தனர். இந்த ஐவரும் சகோதரர்கள். விலங்குகள் ஏதும் தாக்கி இறந்துவிடுவோமோ... தேசத்தை மீட்க முடியாமல் போய்விடுமோ... என்று பயத்தில் திரிந்தனர். எதிரிகளால் தொல்லை நேருமோ... என்று பதுங்கி வாழ்ந்தனர்.
நல்ல உணவும் உறங்குவதற்கு சரியான இடமும் இல்லாததால் நோய் வந்துவிடுமோ என்று கவலைப் பட்டனர். செல்வச் செழிப்புடன் தான-தருமங்களைச் செய்தபடி இருந்த நிலை மாறி, தரித்திரம் பிடித்து வாட்டுகிறதே... என்று கிடைக்கும் உணவை சாப்பிட்டு பொழுதைக் கழித்தனர். பிரத்தியங்கராதேவியை வழிபடுங்கள்; உங்களின் அத்தனை பயத்தையும் போக்குவாள்; பலம் கூட்டுவாள்; வெற்றியைத் தருவாள். அவளை பூஜித்து அவளின் அருளைப் பெறுங்கள் என்று அந்த சகோதரர்கள் ஐவருக்கும் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது.
ஒரு நாள், இவர்கள் தேடி வந்த இடமும் கிடைத்தது. அங்கே சுயம்பு மூர்த்தியாகக் காட்சி தந்தாள் பிரத்தியங்கராதேவி. இதைக் கண்டு பூரித்தவர்கள். தேவியை அர்ச்சித்து வழிபட பூக்களைத் தேடினர். அது சித்திரை மாதம் என்பதால், எங்கே தேடியும் பூக்கள் கிடைக்கவில்லை. நொந்து போனார்கள். "இதென்ன சோதனை? தேவியை வணங்க, பூக்கள் கூட கிடைக்கவில்லையே" என்று வருந்தினர். அந்த நேரம், எதிரே ஓங்கி உயர்ந்து நிற்கும் ஆலமரத்தைக் கண்டனர். இந்த மரத்தின் இலையையே பூக்களாக பாவித்து, பிரத்யங்கிரா தேவியை தியானித்து ஆலம் இலைகளையே எடுத்து அர்ச்சித்தனர். அந்த இலை, ஐந்து ஐந்து இலைகளாக தேவியின் திருப்பாதங்களில் விழுந்தன. இப்படி நெடுநாட்களாக பூஜை செய்த பலனாக, பகைவர்களை வென்றனர்; தேசத்தை மீட்டனர்; இழந்த அதிகாரத்தைப் பெற்றனர். தேசமே பூரித்துப் போனது.
இந்த ஐந்து பேரும் பஞ்ச பாண்டவர்கள். ஐவர் வந்து பூஜித்ததால், இந்தத் தலத்துக்கு ஐவர்பாடி என்ற பெயர் ஏற்பட்டது. இப்போது அய்யாவாடி என்று அழைக்கப்படுகிறது. இங்கே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி, தன்னை வணங்குவோரது அனைத்து பயங்களையும் போக்கி அருள் புரிந்து வருகிறாள் பிரத்யங்கிராதேவி. கும்பகோணம் திருநாகேஸ்வரத்துக்கு அருகில் உள்ள அய்யவாடியில் குடிகொண்டிருக்கும் தேவியின் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்றைக்கும் சுடுகாடுகள் இருக்கின்றன.
இந்தரஜித் இராவணனுக்குத் துணையாக தேவர்களை அடக்க நிகும்பலை யாகம் செய்தான். அவ்வாறு அவன் நிகும்பலை யாகம் செய்த இடம் இந்த அய்யாவாடிதான் என்றும் சொல்லப்படுகிறது.
இங்கு ஒவ்வொரு அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும் மிகச்சிறப்பாக ஹோமம் நடைபெறுகிறது. அந்த ஹோமத்தில் பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் கலந்து கொண்டு பயனடைகிறார்கள்.
பணம் படைத்தவர்களால், அதிக உடல்பலம் படைத்தவர்களால் நல்லோர்கள் ஏமாற்றப்படுதலும் வதைபடுதலும் அதிகம் நடக்கிறது. அப்படி வதைபடுபவர்களால் பதிலுக்கு எதுவும் செய்ய முடிவதில்லை. அதிகாரத்தை, உடல்பலத்தை, பணபலத்தை எதிர்க்க பல பேருக்கு சக்தியில்லை. அப்படி சக்தி இல்லாதவர்கள் தங்களுடைய குறைகளை தெய்வத்திடம் முறையிடுகிறார்கள். அப்படி முறையிடுகிற கோயில்களில் மிக முக்கியமானது அய்யாவாடியிலுள்ள பிரத்யங்கரா தேவி கோயில்.
இந்த மஹா பிரத்யங்கரா தேவி கைமேல் பலன் தருவாள். உங்களை அழிக்க எவர் நினைத்தாலும், உங்களை வதைக்க எவர் முயன்றாலும் இங்கு வந்து ஒரு நிமிடம் மனம் கூப்பி தேவியின் பெயரைச் சொல்லி அழைத்து எனக்கு இந்த துன்பம் இருக்கிறது. தயவு செய்து நீக்கி விடு என்று சொன்னால் போதும். உங்கள் எதிரிகளை வெகுநிச்சயமாய் இவள் துவம்சம் செய்வாள். உங்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டும் என்பதுதான் இதில் மிக முக்கியம்.
ஒவ்வொரு அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும் நடக்கும் ஹோமத்தின் உச்சகட்டமாக, வடமிளகாயை அம்பாளுக்கு நிவேதனம் செய்வார்கள். கூடைகூடையாய் மிளகாயைக் கொட்டுவார்கள். ஆனாலும் ஒரு சிறுகமறல் கூட அங்கு எழாது. சகலமும் அவள் உள்வாங்கிக் கொண்டு விடுகிறாள் என்று அங்குள்ளோர் சொல்கிறார்கள். கும்பகோணத்திலிருந்து சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
வழிபட்டோர் : பஞ்ச பாண்டவர்கள்.
நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
பூஜை விவரம் : நான்கு கால பூஜை.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம், திருநாகேஸ்வரம்
கோயில் முகவரி : அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,