எல்லாருக்கும் குரங்காரின் வணக்கம் . குரங்கு போலி போலின்னு...
எல்லாருக்கும் குரங்காரின் வணக்கம் .
குரங்கு போலி போலின்னு புளிய கரைச்சிட்டு இருக்காதீங்க நட்பூஸ்களே. எழுத்துக்கு உள்ள வந்த அன்னிக்கே கேட்ட அத்தாட்சிகள கொடுத்தாச்சு. எழுத்து அதிகாரிங்க சட்டம் வழியா எதுனாலும் கேட்டாலும் கொடுப்போம்.அதுபோக இங்க இருக்கிற சில மொக்கைகளுக்கு குரங்கு யாரு. குரங்கு பேரு. ஊரு . திங்கிற சோறு என்னான்னும் குரங்குக்கு எங்க எங்க மச்சம் இருக்குன்னும் விளாவாரியா சொல்ல எந்த அவசியமும் இல்ல. நா என்னய்யா வந்து பண்ணிப்புட்டேன்.
ஒருத்தர் கிட்ட நான் விமர்சிக்கட்டுமான்னு கேட்டேன். அம்புட்டுதானே. உடனே அவரு லபோதிபோன்னு கத்த ஆரம்பிச்சாரு. இன்னொருவர் கிட்ட சாதாரணமா தாங்க கருத்துச் சொன்னேங்க. உடனே அவரு.. யோவ்.. ந்னு ஏசுறாரு. அடுத்தாப்ல இரண்டு பேரு டீசண்டா பதில் சொன்னாங்க. இன்னொருவரு எடக்கு மடக்கா சொன்னாரு. இன்னும் சிலரு பதிலே சொல்லல. இதுதான் நடந்தது.
பெரியோர்களே! தாய்மார்களே. என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே. ரத்தத்தின் ரத்தங்களே. நீங்களே சொல்லுங்க அப்பு. நான் என்னத்த குத்தம் செஞ்சேன்.
நான் யாரா இருந்தாலும் உங்களுக்கு என்னவாம். இன்னாருதான் இவன். அவன்ன்னு ஏனய்ய உங்க மண்டைய உடைக்கிறிங்க.
வம்பு தும்புக்கு போகாது குரங்கு
வந்த வம்பை விடாது. அடங்கு.
-குரங்கு குட்டி
(அலைபாயும் ஒரே விலங்கினம் மனிதன்)