எங்கே எங்கே காணவில்லையே... என் ஆருயிர் நண்பர் செந்தேள்.?...
எங்கே எங்கே காணவில்லையே... என் ஆருயிர் நண்பர் செந்தேள்.?
ஆஹா !! துரத்திட்டிங்களா சகோதரர்களே. ச்சே பாவம் செந்தேள்.
எதுனா இருந்தாலும் பஞ்சாயத்து வச்சி பேசி தீர்த்துக்கலாம் நண்பர்களே. துரத்தாதீங்க.
அப்பால எதுக்கு எடுத்தாலும் டென்ஷன் ஆகாதிங்க. என்ன ஆகிடப்போவுது. நிதானமா பேசுவோம். பழகுவோம்.
ஒரே ஒரு வெள்ளம் தான்.எல்லாம் போச்சு. வீடு இல்ல வாசல் இல்ல. வந்து உதவினவன்லாம் நம்ம எதிரியா. இனமா, சாதியா. நம்ம மொழியா எதுவும் பார்க்கல. பசிக்கு சோறு கிடைக்குமான்னு ஆகாயத்தை நோக்கி ஹெலிகாப்டர பார்த்துட்டு கிடந்தோம்ல.
போகும் போது என்னத்தய்யா கொண்டுப் போகப் போறோம் ?
போங்கப்பா போங்க. பாரதியார் ,பெரியார், காந்தி ,ஏசு ,புத்தர் பல தத்துவங்கள சொல்லியும் நாம கேட்காத ஒரு விசயத்தை ஒரு மழை வெளுத்து வாங்கி புரியவச்சிப் போச்சு. அப்பவும் தெளியலன்னா.
என்னத்த எழுதி என்னத்த ..............