எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஹைக்கூ வண்ணங்களால் அல்ல; எண்ணங்களால் மாறும் வாழ்கையின் நிறம்........

ஹைக்கூ


வண்ணங்களால் அல்ல;
எண்ணங்களால் மாறும்
வாழ்கையின் நிறம்.....

பசி சுமந்த மனிதனை 
ஏளனமாய் பார்த்தது
பொதி சுமக்கும் கழுதை.....

கறார் விலையில்
கரைந்து போனது
விற்காத பழத்தின் அழகு...


காதலுக்கு மட்டுமே
பிடித்தமான ஒன்று
காத்திருக்கும் சுகம்....

இன்பமான வேதனை
கணவன், மனைவிக்கு இடையே
ஊடல் பொழுதுகள்......




நாள் : 26-Dec-15, 12:35 pm

மேலே