புதுவை சாந்திதாசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  புதுவை சாந்திதாசன்
இடம்:  கரிக்கலாம் பாக்கம்
பிறந்த தேதி :  02-Jul-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Dec-2015
பார்த்தவர்கள்:  214
புள்ளி:  1

என் படைப்புகள்
புதுவை சாந்திதாசன் செய்திகள்
புதுவை சாந்திதாசன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2016 8:16 pm

பொங்கல் ஹைக்கூ
--------

சேற்றை மிதித்து
சோற்றை தருபவன் நாள்
பொங்கல்

^^^

பச்சரிசி பல் அழகி
பால்வடியும் முகஅழகி
பொங்கல்

^^^

மும்மாரி பொழிந்து
மூவேளை உணவுதரும் நாள்
பொங்கல்

^^^

கவிப்புயல் இனியவன்
பொங்கல் வாழ்த்துகள்

மேலும்

அருமையான அழகு ,அழகான குட்டி கவி 19-Jan-2016 10:16 am
சூப்பர் 18-Jan-2016 5:27 pm
அருமை 18-Jan-2016 2:26 pm
வாழ்த்துகளுக்கு நன்றி நன்றி 15-Jan-2016 5:48 am
புதுவை சாந்திதாசன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2015 11:28 am

'மாமோவ்... எங்க இருக்கீங்க...'
தொலைபேசி சிணுங்கியது.
பார்த்ததும் அழைப்பில் மனைவி... மூக்களவில் இருந்த கோபம் அதிகமாகியது தர்மராஜ்க்கு

தர்மராஜ். ஊரில் மரியாதையானவர். பெரும் பணம் படைத்தவர் இல்லை. பாசக்காரர். ஊரில் உள்ளவர்களுடன் வேற்றுமை பாராது சகஜமாக பழகும் இனிய எளிய மனிதர் தான் இந்த தர்மராஜ்.
மனைவி மோகனா. கொஞ்சம் கோபக்காரி. பிடிவாதகுணம் கொண்டவள். ஆயினும் அன்பு செலுத்துவதில் அந்த அன்னை தெரேசாவை மிஞ்சுபவள்.
மகன் கிருஷ்ணன். பார்ப்போர் மனங்களில் பிள்ளைக்கு வரைவிலக்கணம் இவன் என பொறாமை கொள்வர்.
மகள் கனிமொழி. வீட்டின் தேவதை. பெயருக்கு ஏற்றால் போல கனிவானவள்.
எல்லாம் படைத்த அந்த கடவுள் கூட வந்த

மேலும்

அருமையான கதை அக்கா.... 08-Feb-2016 7:41 pm
எளிய தமிழ் நடை தோழி 05-Jan-2016 8:56 pm
கதை நல்லா இருக்கு சகோ ! தங்கள் படைப்பு குடிகாரர்களுக்கு ஒரு படிப்பினை ! வாழ்த்துகள் நட்பே ! 23-Dec-2015 3:00 pm
சரி உங்கட நல்ல கருத்திற்கு நன்றி 12-Dec-2015 1:27 pm
புதுவை சாந்திதாசன் - கீத்ஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Dec-2009 12:24 pm

இறக்கமுடியாத சிலுவைகள்

சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!...
வானம் நட்ஷத்திரங்களையும்!...
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வத

மேலும்

ஆஹா மிக்கச் சிறப்பான கவிதை முள்ளோடு இருந்தும் எப்படிச் சிரிக்கிறாய் என்ற உங்கள் ரோஜா கவிதை இன்னும் நினைவிருக்கிறது . நான் ரசித்த அற்புத வரிகள் : காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்! கால்யாணத்திற்குத் தான் கால்களும் தெரியும்! ----காதல் விழைவோர் சிந்திக்க வேண்டிய வரிகள் கிழிந்த பாயில் படுத்தபடி கிளியோபாற்ராவை நினைத்து ஏங்கும் என் அண்ணன்! ஐரோப்பாவில் கல்யாணத் தோல்விகள் அதிகம்! இந்தியவில் காதல் தோல்விகள் அதிகம்! --நினைத்துப் பார்க்க வேண்டிய கவிதை வாழ்த்துக்கள் கவிப்பிரிய கீத்ஸ் அன்புடன், கவின் சாரலன் 17-Jan-2016 10:23 am
மிகவும் ஆழமான காதலின் கருப்பொருள் நிறைந்த கவிதை பகிர்வு காதலின் நிதர்சனத்தை மண்ணில் மேல் பல குற்றங்களையும் சுட்டிக்காட்டி செல்கிறது கவிதை கிழிந்த பாயில் படுத்தபடி கிளியோபாற்ராவை நினைத்து ஏங்கும் என் அண்ணன்! இந்த வரிகளை வைரமுத்து அவர்கள் ஒரு பாடலிலும் பயன்படுத்தி இருப்பார் 17-Jan-2016 7:01 am
உணர்வுபூர்வமான காதல் வரிகள் ..! குடும்பம் என்னும் பாதசுவடுகளின் மீது பயணிக்கும் மங்கைக்கு குடும்ப சுமையே ஆணிகளாக இருக்க காதலுக்கு சிறகுகள் எங்கே முளைக்கும் ...? நல்ல கவிதை வாழ்த்துக்கள் ...! 08-Sep-2013 4:23 pm
வைரமுத்து வைர வரிகள் காதல் தப்பா அல்லது காதலித்தது தப்பா 25-Aug-2011 10:19 pm
புதுவை சாந்திதாசன் - புதுவை சாந்திதாசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2015 12:35 pm

ஹைக்கூ


வண்ணங்களால் அல்ல;
எண்ணங்களால் மாறும்
வாழ்கையின் நிறம்.....

பசி சுமந்த மனிதனை 
ஏளனமாய் பார்த்தது
பொதி சுமக்கும் கழுதை.....

கறார் விலையில்
கரைந்து போனது
விற்காத பழத்தின் அழகு...


காதலுக்கு மட்டுமே
பிடித்தமான ஒன்று
காத்திருக்கும் சுகம்....

இன்பமான வேதனை
கணவன், மனைவிக்கு இடையே
ஊடல் பொழுதுகள்......




மேலும்

ஹைக்கூ


வண்ணங்களால் அல்ல;
எண்ணங்களால் மாறும்
வாழ்கையின் நிறம்.....

பசி சுமந்த மனிதனை 
ஏளனமாய் பார்த்தது
பொதி சுமக்கும் கழுதை.....

கறார் விலையில்
கரைந்து போனது
விற்காத பழத்தின் அழகு...


காதலுக்கு மட்டுமே
பிடித்தமான ஒன்று
காத்திருக்கும் சுகம்....

இன்பமான வேதனை
கணவன், மனைவிக்கு இடையே
ஊடல் பொழுதுகள்......




மேலும்

புதுக்கவிதை.

நான் 
எப்படி திரும்பி பார்த்தாலும்
முகம் காட்டி மறைகிறாய்
நீயும்
நிலவும்
தோழிகளோ .....!





மேலும்

புதுவை சாந்திதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2015 11:34 am

அளவோடு வந்தால்
நலமோடு வாழ்வோம்
சிந்திக்க வேண்டும் மழை..!


கிராமத்து கடிகாரம்
ஓட மறுக்கிறது
அரசு பேருந்து...!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

பிரவீன்குமார்

பிரவீன்குமார்

திருவண்ணாமலை
பரதகவி

பரதகவி

சென்னை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
சந்தோஷ்

சந்தோஷ்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பரதகவி

பரதகவி

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
சந்தோஷ்

சந்தோஷ்

திருப்பூர்
மேலே