தமிழர் திருநாள் என போற்றப்படுவதுதான் நம் பொங்கல் விழா....
"தைப்பிறந்தால் வழிப்பிறக்கும்" என்பது பழமொழி......தைத்திங்களை வளம் கொடுக்கும் திங்களாக கருதுவது இயல்பு.
இந்த தைமாதம் தான் உழவர்களின் முழுபலனும் களத்திலிருந்து வீடுக்கு வரும் மாதமாக நினைத்து கொண்டாடுகின்றனர்..........ஆண்டு முழுதும் உழைத்த பலனை உழவர்களுக்கு கொடுக்கும் மாதமாக இந்த மாதம் கருதப்படுகிறது.
கிராமங்களில் மக்கள் மிகச்சிறப்பாக நடத்தும் முக்கிய விழா என்பது குறிப்பிடத்தக்கது.
கதிரவன் கண் விழிக்கும் முன்னே மக்கள் கண் விழித்து நீராடி புத்தாடை அணிந்து வாசல் தெளித்து கோலம் போட்டு படையல் படைத்து அடுப்பில் பானை ஏற்றி பொங்கலிட்டு........கரும்போடு பொங்கலையும் இனிப்பாய் சுவைகின்றனர்.
அடுத்தநாள் மாட்டுப்பொங்கல் உழைக்கும் பிராணிகளுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்த மாட்டுப்பொங்கல் இன்றும் சிறப்பாய் கொண்டாடப்படுகிறது.
மாட்டுப்பொங்கலுக்கு அடுத்தநாள் காணும் பொங்கல் இயற்கையின் அழகை அந்நாளில் மக்கள் கண்டு சுவைக்கின்றனர்.
பொங்கல் விழா இயற்கையின் இன்பத்தை இனிமையாய் சுவைக்கும் இனிமையான விழாவாக மக்கள் போற்றுகின்றனர்.
சமயங்களைக்கடந்து கொண்டாடப்படும் இனியத்திருவிழா நம் பொங்கல் திருவிழா.
அனைவரும் மகிழ்ச்சியோடு தைமாதத்தை வரவேற்று பொங்கலை இல்லங்களில் சிறப்பாய் நடத்த வாழ்த்துக்கள் ...!
இந்த தைமாதத்தில் அனைவர் எண்ணங்களும் நிறைவேற......பொங்கல் மங்களமாய் பொங்கி வாழ்வு சிறக்க என் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.........!