சீமான் அவர்கள் அரசியல் கட்சி ஒன்றின் தலைவரா அல்லது...
சீமான் அவர்கள் அரசியல் கட்சி ஒன்றின் தலைவரா அல்லது சாதிக் கட்சி/சாதி அமைப்பின் தலைவரா? அவர் தமிழரா அல்லது தமிழரல்லாதவரா?
####%#####%%%%%
கீழே உள்ள தகவலையும் எனது இன்னொரு பதிவையும் படித்துவிட்டு விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம்
###%####%#%%%%%%%
செய்தி::::::::
நம் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரை போடவிடாமல் செய்ததே நம் அழிவுக்கு காரணம் --- சீமான்
#####
பஞ்ச்::::::::
சாதிக்க வழிகாட்டச் சொன்னா 'சாதி'க்கு வழிகாட்டுகிறாரே --- வ. முருகன், பாப்பனப்பட்டு
#######
நன்றி::: 'தி இந்து' தமிழ் நாளிதழ் , திங்கள், மே9, 2016 பக்கம் 11 புதுச்சேரி பதிப்பு
###########
பிற இந்திய மாநிலங்களில்.
உள்ளவர்களில்
பெரும்பாலோர் சாதிப்
பெயர்களைத் தங்கள்
பெயர்களோடு
போட்டுக்கொள்வதைப்
பெருமையாகவும் வழக்கமான
செயலாகவும்
கொண்டுள்ளனர். நாட்டின்
முதல் குடிமகன் முதல்
பாமரர்களும் இதில் அடக்கம்.
############
ஆனால் தமிழர்களில்
பெரும்பாலோர் தங்கள் சாதிப்
பெயர்களைத் தங்கள்
பெயர்களுடன் போட்டுக்
கொள்வதை மிகவும் இழிவான
செயலாக நினைக்கிறார்கள்.
சில சாதி அமைப்புகளும்
சாதிக் கட்சிகளும் உருவான
பின்பு ஏட்டுச் சுரைக்காய்ப்
பட்டதாரிகள் சிலரும்
சாதிவெறிபிடித்த சிலருந்தான்
வீம்புக்காக,'தாங்கள் தமிழர்கள்
என்பதை மறந்து, தங்கள்
சாதிவால்களைத் தங்கள்
பெயர்களுடன் ஒட்டிக்கொள்ள
ஆர்வம் காட்டுகிறார்கள்.
#####
சாதிப் பெயரைத் தம்
பெயரோடு போட்டுக்
கொள்பவரைத் தமிழராகக்
கருதமுடியாது.
######
ஆறறிவைச் சரியாகப்
புரிந்தவர்க்கு சாதியில்லை.
##%%%
சாதியும் மதமும் செயற்கையானவை. மனிதர்களால் மக்களைப் பல கூறுகளாய்ப் பிரித்து வைக்க உருவாக்கப்பட்டவை.