எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கேடு செய்யும் வெடிகளைத் தவிர்ப்போம். @@ நல்ல செயல்கள்...

கேடு செய்யும் வெடிகளைத் தவிர்ப்போம்.

@@

நல்ல செயல்கள் புரிய போட்டி தேவை தான்.
அது முன்னேற உதவும் போட்டி.

இதய நோயாளிகளை விரைவில் எமலோகம் அனுப்பி வைக்க+

@@
பச்சிளங்குழந்தைகள்
முதுமையில் தள்ளாடித் திரிவோர்
பிணியாளர்கள்
வீட்டு விலங்குகள்
(குறிப்பாக பசுவை கோமாதாவாக வழிபடுவோர் பட்டாசு வெடிப்பவர்களைக் கண்டிக்கவேண்டும்)
ஆகியோரையும் அச்சுறுத்துவோதோடு
காற்றின் தூய்மையைக் கெடுத்து
இயற்கையை ஊனப்படுத்தும் பட்டாசு வெடிக்கும் பாவச் செயலைத் தவிர்க்கவேண்டும்.
@@!
கூலி வேலை செய்பவர்கூட ஒரு நாள் கூலியை கரியாக்க ஆசைப்பட்டு வசதி படைத்தோருடனும் கறுப்புப்பண நாயகர்களுடனும் போட்டியிடவதா?
@@
நம்மை வெடிகளை வெடிக்கச் சொல்லி எந்த மதமும் கடவுளும் அறிவுறுத்தவில்லை.
@@
இயற்கையை ஊனப்படுத்தி உயிரினங்களை அச்சுறுத்தும் நம் செயலை மூவாயிரத்து முக்கோடி தேவர்களும் மன்னிக்கவேமாட்டார்கள்.


பதிவு : மலர்91
நாள் : 25-Oct-16, 6:48 pm

மேலே