எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கேடு செய்யும் வெடிகளைத் தவிர்ப்போம்.

@@

நல்ல செயல்கள் புரிய போட்டி தேவை தான்.
அது முன்னேற உதவும் போட்டி.

இதய நோயாளிகளை விரைவில் எமலோகம் அனுப்பி வைக்க+

@@
பச்சிளங்குழந்தைகள்
முதுமையில் தள்ளாடித் திரிவோர்
பிணியாளர்கள்
வீட்டு விலங்குகள்
(குறிப்பாக பசுவை கோமாதாவாக வழிபடுவோர் பட்டாசு வெடிப்பவர்களைக் கண்டிக்கவேண்டும்)
ஆகியோரையும் அச்சுறுத்துவோதோடு
காற்றின் தூய்மையைக் கெடுத்து
இயற்கையை ஊனப்படுத்தும் பட்டாசு வெடிக்கும் பாவச் செயலைத் தவிர்க்கவேண்டும்.
@@!
கூலி வேலை செய்பவர்கூட ஒரு நாள் கூலியை கரியாக்க ஆசைப்பட்டு வசதி படைத்தோருடனும் கறுப்புப்பண நாயகர்களுடனும் போட்டியிடவதா?
@@
நம்மை வெடிகளை வெடிக்கச் சொல்லி எந்த மதமும் கடவுளும் அறிவுறுத்தவில்லை.
@@
இயற்கையை ஊனப்படுத்தி உயிரினங்களை அச்சுறுத்தும் நம் செயலை மூவாயிரத்து முக்கோடி தேவர்களும் மன்னிக்கவேமாட்டார்கள்.


மேலும்

பலரை சிந்திக்க தூண்டும் வரிகள் 30-Oct-2016 10:48 am
பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் கீழ்க்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்: செம்பு: சுவாசப் பாதையில் எரிச்சல் காட்மியம்: ரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு காரீயம்: நரம்பு மண்டலப் பிரச்சினைகள் மக்னீசியம்: இதன் தூசும் புகையும் உலோகப் புகை காய்ச்சலை ஏற்படுத்தலாம் மாங்கனீசு: உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு சோடியம்: ஈரப்பத காற்றுடன் வினைபுரிந்து தோலை பாதிக்கலாம் துத்தநாகம்: குமட்டல், வாந்தியை உருவாக்கலாம் நைட்ரேட்: மூளை வளர்ச்சியை பாதிக்கலாம் நைட்ரைட்: கோமாவுக்கு இட்டுச் செல்லலாம் உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஒரு பட்டாசில் உள்ள வேதிப்பொருள்களின் பட்டியல், அதன் அட்டையில் அச்சிடப்பட வேண்டும். ஆனால் இது செய்யப்படுவதில்லை. 29-Oct-2016 9:32 pm

மேலே