அறிமுகமில்லா ஆடவரித்தில் அளவறிந்து அறிவுடன் கதைப்பதே கண்மணி நின்...
அறிமுகமில்லா ஆடவரித்தில் அளவறிந்து அறிவுடன் கதைப்பதே கண்மணி நின் அழகு..!!
ஆண்மகன் கடைக்கண் பார்வை வீசினும், சிரம் தாழ்த்தி பின்னவன் மனம் கோணாது செல்லும் நின் பெண்குணம் இன்னும் அழகு..!!
ஆணொருவன் தன்னைப் பார்ப்பதறிந்தால், கர்வம் கொண்டு தன்பின்னே சுற்ற வைத்து பார்க்கும் இக்கால பெண்கள் மத்தியில்..,
என்மனமெண்ணிய அத்துனை குணமும் ஒரு சேர பெற்று பார்க்கும் அனைவரிடத்திலும் பண்புடன் பேசும் நின் பெண்மை நான் வியக்கும் ஓர் அழகு..!!
இத்துனை அழகும் ஒன்றாய் கொண்ட பெண்., நின் தோழமைக்கொண்ட பின் என்வாழ்வோ பார் வியக்கும் பேரழகு..!!!