எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் சின்னச் சிறு அசைவுகளுக்கு 

காது மடல்களிலே தாளம் போடுகின்ற 
காதணியைப் பற்றி சொல்வேனா?-அல்ல 
உன் உதடுகளிலே படர்கின்ற வாய்ப்பை எனக்கில்லாமல் 
பட்டு நூலிலைக்கே சவால்விடும் 
உன் கருமை கூந்தலுக்கு வழங்கிய 
காற்றினை பற்றி நான் கடவுளிடத்தில் 
முறையிட்டதை பற்றி சொல்வேனா?
சொல்லடி ‍ எதை சொல்‍வேன்....

மேலும்

 உன் சின்னச் சிறு அசைவுகளுக்கு 

காது மடல்களிலே தாளம் போடுகின்ற 
காதணியைப் பற்றி சொல்வேனா?-அல்ல 
உன் உதடுகளிலே படர்கின்ற வாய்ப்பை எனக்கில்லாமல் 
பட்டு நூலிலைக்கே சவால்விடும் 
உன் கருமை கூந்தலுக்கு வழங்கிய 
காற்றினை பற்றி நான் கடவுளிடத்தில் 
முறையிட்டதை பற்றி சொல்வேனா?
சொல்லடி ‍ எதை சொல்‍வேன்....

மேலும்

அழுகையும்
அழகு தான் 
உன் நினைவுகளால்
வரும் பொழுது.....

              - தமிழன்

மேலும்

 அழகு!! 
________________


ஏய் பெண்ணே...
சற்று வெளியே வா...
இங்கு நிலவை காணாமல் உண்ண மறுக்கின்றது குழந்தை... 

மேலும்

பல வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் கூட பூக்காமல் ஒற்றைகாலில் தவம் கிடக்கும், ஏனென்றால் பூ உலகில் குறிஞ்சியை விட என் காதலி அழகாக பிறந்திருப்பதால்! 

மேலும்

அழகாக இருப்பதற்கு ஆண்கள் என்ன செய்வது

மனதில் உற்சாகம் இருந்தாலே, முகத்தில் அழகு மிளிரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், உடலுக்கு தேவையான சில சத்தான உணவுப் பொருட்களை உண்ணுவதால், உடல் அழகு மேலும் பொலிவு பெறும். கோதுமை, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களில் இருந்து நீக்கப்படும் உமி, தவிடு போன்றவை அழகூட்டும் பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.
வைட்டமின் இ சத்து மிகுந்த, இந்த தானியத்தின் தவிடுகள், முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, முகச்சுருக்கத்தையும் அகற்றுகிறது. முகத்துக்கு இளமையையும், பளபளப்பையும் கூட்டுகின்றன. சருமத்துக்கு இதமளிப்பதால் சருமத்துக்கான அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதில், முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்துள்ள கோதுமையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஆலிவ் ஆயிலை முகம், கை, கால்களில் பூசி வந்தால் சருமம் பளபளப்பாகும். தேங்காய் எண்ணெயும் முகம் பொலிவு பெற ஏற்றது. அடிக்கடி குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால், முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆலிவ் எண்ணையுடன் முட்டை வெள்ளைக்கரு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் படிவம் போல பூசி, சில நிமிடங்களுக்குப் பின், கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதால், முகம் இளமை பொலிவுடன் திகழும். இரவு நேரங்களில் கை, கால்களில் விளக்கெண்ணெய் தடவி காலையில் வெது வெதுப்பான நீரில் குளித்தால், வறண்ட சருமம் மென்மையாகும்.

குளிர்காலமோ, கோடை காலமோ சருமத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதில் தேன் கலந்து முகம், கை, கால்களில் பூசி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

சமையலில் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு, அயோடின் சத்து மிகுந்தது. இது, எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து, பற்களை துலக்குவதால் மஞ்சள் கறை நீங்கி, பற்கள் பளபளப்பாகும். வெள்ளரிக்காய் உடலுக்கு அதிக குளிர்ச்சி தரக்கூடியது. இதை வட்டமாக நறுக்கி கண்களில் வைத்தால், கண்களில் புத்துணர்ச்சி ஏற்படும். புதினாவை அரைத்து எலுமிச்ச பழச்சாறுடன் கலந்து முகத்தில் பூசினால், முகம் பொலிவு பெறும். முக்கியமாக, முகம் பொலிவுடன் இருக்க, மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். அதே போல தினசரி குறைந்த பட்சம், 7 மணி நேரம் உறங்க வேண்டியது அவசியம்.

மேலும்

அழகிற்க்குள் இவள் இல்லை, 

இவளுக்கு மேல் அழகில்லை...

மேலும்

அழகு என்பது கன்னத்தில் இல்லை அவர் அவர் எண்ணத்தில் உள்ளது . 

மேலும்

பகலில் தெரிந்த பல வர்ணம் 
இரவில் மட்டும் இரு வண்ணம் 
இருளில் மறைந்த மர்மமும் 
ஒளியில் தெரியும் அழகும் 
ஒன்று சேர்ந்ததே இவ்வுலகு 
அத்துணை அழகு ..!!!

மேலும்

மேலும்...

மேலே