சிந்தனை செய்மனமே..7 "புன்னகை" அன்றாட வாழ்க்கையில் எண்ணற்ற மனிதர்களை...
சிந்தனை செய்மனமே..7
"புன்னகை"
அன்றாட வாழ்க்கையில் எண்ணற்ற மனிதர்களை நாம் சந்திக்கிறோம்....
எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் சுபமோ, சோகமோ, ஒரு சிறு புன்னகையைக் கூட முகத்தில் வெளிப்படுத்தாத சிறிய மனம் படைத்தவர்கள் சிலரை நாம் சந்தித்திருப்போம்...
எண்ணிக்கையில் சிறிய அளவில் இருந்தாலும், இவர்களால் எவ்வித இன்ப, துன்பங்களையும் இயல்பாக அனுபவிக்க இயலாத நிலையில் ஒரு வித குற்ற உணர்ச்சியோடுதான் முகபாவத்தை வெளிப்படுத்த முடியும்.... இதிலே வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால்.....
இவர்களை எதிர்பாராமல் சந்திக்கும் போது நாம் வணக்கம் செலுத்தினாலும், பதிலுக்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் *ஒரு சிறு புன்னகை* கூட உதிர்க்க மாட்டார்கள். இதனால், நேர்மறை எண்ணம் கொண்டவர்களும் பாதிக்கப் படுகிறார்கள்....
"புன்னகை" ஆறறிவுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம்.
இதை அடைகாக்கக் கூடாது.. சந்தோஷமாக வெளிக் காண்பிக்கவேண்டும்...
ஒரு பக்கம் கொண்ட வரிகள் நிறைந்த ஆனந்தத்தை "சிறு புன்னகை" ஒன்றின் மூலம் வெளிப்படுத்த முடியும்.
அதேபோல வருகின்ற மிக பெரிய ஆபத்தையும் கூட "புன்னகை" மூலம் எளிதாக சமாளிக்க இயலும்....