எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேர்வெனும் திருநாள்! பெற்றெடுத்த பெற்றோர் பெரியோர்.. உற்றோர் உறவினர்...

தேர்வெனும் திருநாள்!







பெற்றெடுத்த பெற்றோர் பெரியோர்..
உற்றோர் உறவினர் சுற்றத்தார் நண்பர்கள்..

அனைவரும் ஆசி வழங்கிய பின்..
ஆசானை நினைவுகூறும் "அரிதான நன்னாள்!

நீரும் மண்ணும் நெற்றியிலிட்டு..
வீட்டைவிட்டு வெளிவாசல்  வந்தபின்னே..

பல்லிவிழும்பலன் பார்த்து சகுனம்பார்த்து..
பக்குவமாய் வெற்றிபெற "நயம்பல நல்கியநாள்!

அறிவு முக்கியம் ஆற்றல்முக்கியம் அதைவிட..
நினைவு அதிமுக்கியமெனச் "சவால்விடும்நாள்!

தெரிந்ததுபோதும் தெரியாததை விடு..
தைரியம்தான் வாழ்க்கை "எனயுரைக்கும்நாள்!

ஏட்டொன்றைக் கையில் பிடித்தவுடன்..
பட்டென்று இதயம் பலமாக "துடிக்கும்நாள்!

கற்றுணர்ந்த பாடங்களைக் களமிறக்கி..
துரிதமா தயக்கமாவென "வினையெழுப்பும்நாள்!

அவனின்றி ஓரணுவும் அசையாதெனில்
எழுதுகோல் அசையஇறை "நம்பிக்கையெழும்நாள்!

இறைவன்திருவடி வைத்தனுமதி வாங்கிய..
எழுதுகோல் ஏட்டினை கையில்கொடுத்து..

எதிர்காலம் உன்கையிலென 
எடுத்துரைக்கும் "தேர்வெனும் திருநாள்!..

இன்று வியாழன்..02, 2017    

மாணவர்களின் நலன் கருதி, இதை "எண்ணம்" பிரிவில் வெளியிடுகிறேன்.

அன்புடன் 
பெருவை பார்த்தசாரதி

நாள் : 2-Mar-17, 11:21 am

மேலே