கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து வழுக்கை...
கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து
வழுக்கை விழுந்த தலை தான், ஆனால்
வழுக்கி விழாத தலைவர்
மஞ்சள் துண்டு தோளில் இருக்கும்
நெஞ்சில் தமிழ் தாய் மேல் காதல் இருக்கும்
எதுகை மோனை இவருக்கு அடிமை, எழுத்துக்கள்
எது கைக்கு வந்தாலும் அது கவிதை
எதிரியை தூற்றி பேசும்பொழுதும்,
சொல்லும் சொற்களில் இனிமை குறையாது
அரசியல் ஒரு நாகரீகம் என்றால் இவர்
நாகரீகம் உருவாகிய நதிக்கரை
அரசியல் ஒரு கலை என்றால் இவர்
அந்த கலையின் ப்ரஹ்மமா
அரசியல் ஒரு சிகரம் என்றால் இவர்
அந்த சிகரத்தின் உயரம்
ஐந்து முறை முதல்வராக அமர்ந்த பெருமகன.
அரசியல் இவரின் அடையாளம் இவர்
நாவில் முத்தமிழ் விளையாடும்
தொண்ணூற்றுநான்கு அகவை ஆனது
தமிழகம் இவரால் புகழை கொண்டது