எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எது வளர்ச்சி எது மனிதம் எது வாழ்க்கை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~...

எது வளர்ச்சி எது மனிதம் எது வாழ்க்கை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மனிதனா இயந்திரமா  என்ற  வித்தியாசம் அற்று ஒரு வாழ்க்கை ...

பூச்செடியை தாண்டி நகரும் பொழுது ...
ஒரு நொடி கூட ரசிக்காமல்
மிக எளிதாக காரி துப்பிவிட்டு போவோம் பூவின் மேலே .....

ஒரு கிராமத்தை மிக எளிதாக நகரமாக்கிவிடலாம் ...
ஆனால் ஒரு நகரத்தை அவ்வளவு எளிதாக கிராமமாக ஆக்கவே முடியாது ....
ஆனால் இதை தான் நாம் வளர்ச்சி என்று சொல்கிறோம் ....

புரியும்படி சொல்லவேண்டுமானால்
பூமிக்கு தேவை நீர் தான் ...கழிவு நீர் அல்ல ...

தனி மனித வாழ்க்கையில் தற்கொலை பெருகுகிறது ...
காரணம் மனதில் தேவையில்லாததையே 
போட்டு போட்டு புழுங்கி ...மனதை ஒரு தேவை இல்லாதவை சேரும் குப்பை தொட்டியாகவே மாற்றுகிறீர்கள் ....
மனதை மனதாகவே வைத்துக்கொள்ளலாமே.....
அதற்கு நீங்கள்
வாழ்க்கையை வாழ்க்கையாக , நடப்பவைகளை எதார்த்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும் ,...
குழந்தை மனம் வேண்டும் ....பூ என்றால் வாசமும்... முள் என்றால் குத்துவதும் ... தான் சிறப்பு ....

இந்த தலைமுறை நிறைய வற்றை இழந்துவிட்டார்கள் ....
சப்பாத்தி கள்ளி பழங்களும் ...புளியங்காய்களும் ...ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சி என்பதையும் ...
காரணம் நாம் ...ஊடறுத்து கொண்டு செல்லாமல் நம் சந்ததிகளை இயந்திரங்களாக்குகிறோம் ...
இது தான் நம் அடையாளம் ...இதை தான் நாம் இழக்கிறோம் ...

இயந்திரங்கள் வேண்டும் தான் எளிமையாக்க ...
ஆனால் வாழ தேவை இயற்கை ...
இதை புரிந்து விட்டால் சுரண்டலும் அழிவும் இருக்காது ....


எப்படி என்றால்
வயலில் சேத்து நண்டு பிடிச்சிருக்கீங்களா ...
அதில் மகிழ்ச்சியாக பிடிப்பது அலாதியானது ...
அதை விட்டு விட்டு ஐயோ துணி அழுக்காகிறதே என்று எல்லாவற்றையும் இயந்திரத்தனமாகவே பார்க்கும் உள்ளம் தான்
காரணம் எல்லா மன அழுக்கிற்கும் ....

இதுவே இயற்கையோடு
உண்மையாக வாழ்ந்தால்
அழகான வாழ்க்கை ...ரசித்து கொண்டே வாழ  இயற்கை ... குடிக்க சுத்தமான குடிநீர் ...எல்லாமே நியாயமா எல்லோருக்கும் கிடைத்து விடும் ...
தனிமனித ஒழுக்கத்தோடு மனிதனாக வாழ்ந்தால் .....

மனிதனே மனிதனாக இரு ...
செயற்கையை ரசிக்காதே  இயற்கையை நேசி ...
எந்த பிரச்சனையும் துன்பமாகாது எளிதாக எடுத்துக்கொண்டு முயற்சித்தால் ...
இயந்திரமாக இருக்காமல் மனிதனாக இருங்கள் ...அம்மா அப்பாவை பார்த்துக்கொள்ளுங்கள் ....
All is Well ...

தாய் மொழியில் பேசுங்கள் ...
தாய் மொழி என்பது வெறும் மொழி அல்ல ...அது நம் அடையாளம் ....

நாள் : 5-Jun-17, 12:07 pm

மேலே