அப்பாவிற்கு ... அப்பா ... நான்கு வயதில் கதைகள்...
அப்பாவிற்கு ...
அப்பா ...
நான்கு வயதில் கதைகள் சொல்லி வளர்த்தார் ...
நாளும் புதிதாய் கற்றுத்தருவார் ...இன்றும் கற்று தருகிறார் ....
எட்டு வயதில் என்னிடம் எழுதுகோலை தந்து " இது வெறும் எழுதுகோல் அல்ல ,உன் வாழ்க்கைக் கோல் " என்றார் ...
பள்ளியில் இருந்து பரிசு வாங்கி வரும் பொழுது அம்மாவுடன் இணைந்து நெகிழ்வார் ...
அப்பா ,அம்மா , அக்கா , அண்ணா , பாட்டி ...இப்படி ஒரு குடும்பம் கிடைத்திருக்கிறது ...நான் மிகவும் கொடுத்து வைத்தவள் ...
என்னை நன்றாக படைத்து ...எல்லா வளங்களையும் தந்த இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் ...
எனக்கு உயிர் கொடுத்த என் தாய் தந்தைக்கு என்றைக்கும் கடமை பட்டிருக்கிறேன் ...
பத்து வயதில்
திருப்பதியில் தோளில் உட்கார வைத்து
சாமி தெரிகிறதா ? என்று பாசமாக கேட்டவர் என் தந்தை ....
இரு சக்கர வாகனத்தின் முன் இருக்கையில் அமர வைத்து ஊரை சுற்றி காண்பித்தவர் அப்பா ...
இரு சக்கர வாகனம் ஓட்ட கற்று தந்தவர் என் அப்பா .....
நான் வெற்றி அடையும் பொழுது அதிகம் சந்தோசப்படுபவர் அப்பா...
என் சின்ன காயத்தையும் பெரிதாக சொல்வார்.....
என்னை சிப்பிக்குள் முத்து போல் பாதுகாப்பார் ...
வளர்ந்தாலும் அவருக்கு என்றுமே நான் குழந்தை தான் ...
இருவரும் அன்பை கூட வாதம் செய்து வெளிப்படுத்துவோம் ...
அப்பா மகள் பாசம்
வாழ்நாள் முழுவதும் வருவது ...
என் தந்தைக்கு நான் தாயாக இருப்பேன் ...
அப்பா சோகமாக இருந்தது
பாட்டி இறந்த பொழுது ...
அப்பா நல்ல உழைப்பாளி ...
அப்பா சிறந்த முன்மாதிரி ...
உயிர் கொடுத்த நட்பு ...அப்பா
அப்பா அப்பா தான் ...
உண்மையும் நேர்மையும் அப்பா ...
நிசமும் வாழ்க்கையும் அப்பா ...
வெள்ளையும் உள்ளமும் அப்பா ...
கண்டிப்பும் கண்ணீரும் அப்பா ...
அன்பும் அறிவும் அப்பா ...
அடியும் பாசமும் அப்பா ...
உயிரும் உணவும் அப்பா ...
உழைப்பும் துணிச்சலும் அப்பா ...
சொல்லும் செயலும் அப்பா ...
அப்பா ...
எழுத்தும் பாட்டும் அப்பாவிற்கு ...
வீரமும் அன்பும் ஒருமித்தவர் என் அப்பா ...
~ உங்கள் மகள் பிரபாவதி வீரமுத்து