சிந்தனை செய்மனமே..௨௦ சிந்தனை செய்மனமே-20..! குணத்தின் குணம்..! ================...
சிந்தனை செய்மனமே..௨௦
சிந்தனை
செய்மனமே-20..!
குணத்தின்
குணம்..!
================
ஆண்களுக்குண்டாம்
குணம்
அதிகாரம்..!
பெண்களுக்குண்டாம்
குணம்
கர்வம்..!
திருமணத்துக்கு
உரிய குணம்
சந்தோஷம்..!
வாழ்த்த
வந்தவர்களின் குணம்
நன்றி..!
புதுமணத்
தம்பதிகளின் குணம்
பொறாமை..!
கூட்டுக்
குடும்பத்தின் குணம்
சந்தோஷம்..!
தனிக்
குடுத்தனத்தின் குணம்
துக்கம்..!
முதலிரவில்
பொதுவான குணம்
பயம்..!
தேனிலவில்
தித்திக்கும் குணம்
கோபம்..!
மனிதனுக்கே
உரித்தான குணம்
மறப்பது..!
இறைவனுக்கே
உறித்தான குணம்
மன்னித்தருள்வது..!
குணங்களில்
தலைமைக் குணம்
நல்புத்தி..!
மனந்தூயார்க்கு
எச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன்று
ஆகா வினை...குறள்-456
பொருள்:: நல்ல புத்தி, மனம் படைத்தார்க்குப் பின்வழி
நன்றாகுமாம், தூய நெஞ்சம் உடையவர்க்கு நன்மக்கட்பேறு உண்டாகுமென்றும், மனத்தூய்மை உடையவர்க்கு
மக்கட்பேறு நன்மையுடையதாக அமையும் என்ற பொருளில் உரை தந்திருக்கின்றனர் நல்லாசிரியர்கள்