எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்கள் தினக்கவிதை: தன் நலமற்ற தாய் அன்பான சகோதரி...

 பெண்கள் தினக்கவிதை:


தன் நலமற்ற தாய்
அன்பான சகோதரி
கனிவான காதலி
மென்மையான மனைவி
இவை அனைத்தும்
ஆணின் கண்களுக்கு
பெண்மை.

மழைதரும் மாரியம்மன்
வீரமிக்க ராணி லட்சுமி பாய்
விண்ணில் பறந்த கல்பனா சாவ்ளா
விஜயம் கண்ட சிந்து...
விண்ணும் மண்ணும் அளந்தாலும்
பல சாதனை புரிந்தாலும்
மாப்பிள்ளை தேடும்போது
அவை மறைக்கப்படும்

பாரத மாதா என்றும்,
கங்கா, யமுனா, காவேரி என்றும்
அம்மன், பத்ரகாளி என்றும் பெயரிட்டு
பெயர்களால் மட்டுமே பெண்மை போற்றுகின்றோம்
பெண் பெண்ணல்ல
இறைவன் அருளிய இறைவி
மனித இனம் விதைத்த மனிதி  

நாள் : 26-Jul-17, 6:52 pm

மேலே