விஜய் ஆனந்த் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விஜய் ஆனந்த் |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 07-Feb-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 124 |
புள்ளி | : 3 |
இரயில்!!
அவற்றின் முதுகில் ஏறிக்கொண்டும்
பச்சை வயல்களைக் கிழித்துக்கொண்டும்
செல்கின்றது இரயில்.
இடியையும் புயலையும்
சுடும் வெயிலையும்
குளிர் பணியையும் கண்டு
அஞ்சாத இரயில், ஏனோ
தண்டவாள ஜோடியின் சிறுபிளவால்
தடம் புரளுகிறது.
கஞ்சிக்கு காசில்லாதவனுள் பெட்டிக்கும்
நடுத்தர நாயகனுள்ள படுக்கை பெட்டிக்கும்
அவர்கள் தேர்ந்தெடுத்த வெள்ளை வேட்டிகளுள்ள குளிர்சாதன பெட்டிக்கும்
இணைப்பிருந்தாலும் இணைப்பில்லை.
சுட்டிப்பிள்ளை கைக்குழந்தை
அம்மா அப்பா தாத்தா பாட்டி
இப்படி பல குடும்பங்களின்
வீடாகிறது இரயில்
பயணம் முடியும் வரை.
பாவம் இரயிலுக்கு என்ன தெரியும்?
இவ்வெதையும் கவனியாமல்
அத்தனை நீலநிற பெட்டிகளயும்
இழுத்துக்கொண்டே செல்கிறது....
இரயில்!!
அவற்றின் முதுகில் ஏறிக்கொண்டும்
பச்சை வயல்களைக் கிழித்துக்கொண்டும்
செல்கின்றது இரயில்.
இடியையும் புயலையும்
சுடும் வெயிலையும்
குளிர் பணியையும் கண்டு
அஞ்சாத இரயில், ஏனோ
தண்டவாள ஜோடியின் சிறுபிளவால்
தடம் புரளுகிறது.
கஞ்சிக்கு காசில்லாதவனுள் பெட்டிக்கும்
நடுத்தர நாயகனுள்ள படுக்கை பெட்டிக்கும்
அவர்கள் தேர்ந்தெடுத்த வெள்ளை வேட்டிகளுள்ள குளிர்சாதன பெட்டிக்கும்
இணைப்பிருந்தாலும் இணைப்பில்லை.
சுட்டிப்பிள்ளை கைக்குழந்தை
அம்மா அப்பா தாத்தா பாட்டி
இப்படி பல குடும்பங்களின்
வீடாகிறது இரயில்
பயணம் முடியும் வரை.
பாவம் இரயிலுக்கு என்ன தெரியும்?
இவ்வெதையும் கவனியாமல்
அத்தனை நீலநிற பெட்டிகளயும்
இழுத்துக்கொண்டே செல்கிறது....
"தமிழை காணவில்லை!"
தாயின் வயிற்றில்
அவளின் தூயதமிழைக் கேட்டாய்!
பிறந்தவுடன் சுற்றமும்
பாராட்டிய செந்தமிழைக் கேட்டாய்!
பள்ளி சென்றதும்
நுனிநாக்கு ஆங்கிலம் கேட்டாய்!
கல்லூரி முடிந்ததும்
வெளிநாட்டு வேலை கேட்டாய்!
பணமழை பொழிந்தபின்
உன் தாயை மறந்தாய்!
உன் தந்தையை மறந்தாய்!
உன் வீட்டை மறந்தாய்!
உன் நாட்டை மறந்தாய்!
கடைசியில் தமிழையும் மறந்தாய்!
நினைவில் கொள்ளடா
உன் மைந்தன்
"தமிழை காணவில்லை" என்ற
ஆங்கிலப்பலகை மட்டும் காண்பான்!
தன் நலமற்ற தாய்
அன்பான சகோதரி
கனிவான காதலி
மென்மையான மனைவி
இவை அனைத்தும்
ஆணின் கண்களுக்கு
பெண்மை.
மழைதரும் மாரியம்மன்
வீரமிக்க ராணி லட்சுமி பாய்
விண்ணில் பறந்த கல்பனா சாவ்ளா
விஜயம் கண்ட சிந்து...
விண்ணும் மண்ணும் அளந்தாலும்
பல சாதனை புரிந்தாலும்
மாப்பிள்ளை தேடும்போது
அவை மறைக்கப்படும்
பாரத மாதா என்றும்,
கங்கா, யமுனா, காவேரி என்றும்
அம்மன், பத்ரகாளி என்றும் பெயரிட்டு
பெயர்களால் மட்டுமே பெண்மை போற்றுகின்றோம்
பெண் பெண்ணல்ல
இறைவன் அருளிய இறைவி
மனித இனம் விதைத்த மனிதி
பெண்கள் தினக்கவிதை:
தன் நலமற்ற தாய்
அன்பான சகோதரி
கனிவான காதலி
மென்மையான மனைவி
இவை அனைத்தும்
ஆணின் கண்களுக்கு
பெண்மை.
மழைதரும் மாரியம்மன்
வீரமிக்க ராணி லட்சுமி பாய்
விண்ணில் பறந்த கல்பனா சாவ்ளா
விஜயம் கண்ட சிந்து...
விண்ணும் மண்ணும் அளந்தாலும்
பல சாதனை புரிந்தாலும்
மாப்பிள்ளை தேடும்போது
அவை மறைக்கப்படும்
பாரத மாதா என்றும்,
கங்கா, யமுனா, காவேரி என்றும்
அம்மன், பத்ரகாளி என்றும் பெயரிட்டு
பெயர்களால் மட்டுமே பெண்மை போற்றுகின்றோம்
பெண் பெண்ணல்ல
இறைவன் அருளிய இறைவி
மனித இனம் விதைத்த மனிதி
காலையில்
காகிதத்தில் நான் கொடுத்த
காதல் கடிதத்தை நீ
கிழித்து வீசிய போது
என் மனம்
மாலையில் உதிர்ந்த
காகிதப்பூவாகி உந்தன்
காலடியில் மிதிபட்டு
மன்னிப்பு கேட்க ஏங்கியது