இரயில்!! இணைபிரியா காதலர்கள் தண்டவாளங்கள்! அவற்றின் முதுகில் ஏறிக்கொண்டும்...
இரயில்!!
இணைபிரியா காதலர்கள் தண்டவாளங்கள்!
அவற்றின் முதுகில் ஏறிக்கொண்டும்
பச்சை வயல்களைக் கிழித்துக்கொண்டும்
செல்கின்றது இரயில்.
இடியையும் புயலையும்
சுடும் வெயிலையும்
குளிர் பணியையும் கண்டு
அஞ்சாத இரயில், ஏனோ
தண்டவாள ஜோடியின் சிறுபிளவால்
தடம் புரளுகிறது.
கஞ்சிக்கு காசில்லாதவனுள் பெட்டிக்கும்
நடுத்தர நாயகனுள்ள படுக்கை பெட்டிக்கும்
அவர்கள் தேர்ந்தெடுத்த வெள்ளை வேட்டிகளுள்ள குளிர்சாதன பெட்டிக்கும்
இணைப்பிருந்தாலும் இணைப்பில்லை.
சுட்டிப்பிள்ளை கைக்குழந்தை
அம்மா அப்பா தாத்தா பாட்டி
இப்படி பல குடும்பங்களின்
வீடாகிறது இரயில்
பயணம் முடியும் வரை.
பாவம் இரயிலுக்கு என்ன தெரியும்?
இவ்வெதையும் கவனியாமல்
அத்தனை நீலநிற பெட்டிகளயும்
இழுத்துக்கொண்டே செல்கிறது....
அவற்றின் முதுகில் ஏறிக்கொண்டும்
பச்சை வயல்களைக் கிழித்துக்கொண்டும்
செல்கின்றது இரயில்.
இடியையும் புயலையும்
சுடும் வெயிலையும்
குளிர் பணியையும் கண்டு
அஞ்சாத இரயில், ஏனோ
தண்டவாள ஜோடியின் சிறுபிளவால்
தடம் புரளுகிறது.
கஞ்சிக்கு காசில்லாதவனுள் பெட்டிக்கும்
நடுத்தர நாயகனுள்ள படுக்கை பெட்டிக்கும்
அவர்கள் தேர்ந்தெடுத்த வெள்ளை வேட்டிகளுள்ள குளிர்சாதன பெட்டிக்கும்
இணைப்பிருந்தாலும் இணைப்பில்லை.
சுட்டிப்பிள்ளை கைக்குழந்தை
அம்மா அப்பா தாத்தா பாட்டி
இப்படி பல குடும்பங்களின்
வீடாகிறது இரயில்
பயணம் முடியும் வரை.
பாவம் இரயிலுக்கு என்ன தெரியும்?
இவ்வெதையும் கவனியாமல்
அத்தனை நீலநிற பெட்டிகளயும்
இழுத்துக்கொண்டே செல்கிறது....